புரட்டாசி மாதத்திற்குப் பின் மீண்டும் களைகட்டிய விற்பனை

பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து வந்த புரட்டாசி மாதம் நேற்று (அக்.18) முடிவுக்கு வந்தது. இதையடுத்து, இன்று (அக்.19) அதிகாலையிலேயே அசைவ உணவு பிரியர்களின் கூட்டம் சந்தைகளில் அலைமோதியது. சென்னை காசிமேடு மீன் சந்தையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால், அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. அதேபோல், ஆடு மற்றும் கோழிகளை விற்பனை செய்யும் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புரட்டாசி மாதம் முழுவதும் மந்தமாக இருந்த அசைவ உணவு விற்பனை, தற்போது மீண்டும் களைகட்டியுள்ளது.