சிக்கலில் செல்வம், அர்ச்சனாவின் வாழ்க்கை என்னவாகும்..? "திருமதி செல்வம்" நெடுந்தொடர்
சிக்கலில் செல்வம், அர்ச்சனாவின் வாழ்க்கை என்னவாகும்..?
"திருமதி செல்வம்" நெடுந்தொடர்
கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் "திருமதி செல்வம்".
சஞ்ஜீவ் வெங்கட் செல்வமாகவும், அபிதா அர்ச்சனாவாகவும் முன்னணி வேடங்களில் நடிக்கும் இந்த தொடரில் செல்வத்தின் முன்னாள் காதலியும், தோழியுமான நந்தினி செல்வத்தையும், அர்ச்சனாவையும் பிரிக்க நினைத்து சதிவேலைகளை தொடர்கிறார்.
அதன் ஒருபகுதியாக, நந்தினி, செல்வத்தால் கர்ப்பமாக இருப்பது தெரிய வர, இதனால் அதிர்ச்சியடையும் செல்வம் அடுத்து எடுக்கப்போகும் முடிவு என்ன? அர்ச்சனாவின் வாழ்க்கை என்னவாகும்? என்கிற விறுவிறுப்போடு தொடர் நகர்ந்து வருகிறது.
"திருமதி செல்வம்" நெடுந்தொடரை திங்கள் முதல் சனிக்கிழமை இரவு 9:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது