கேடிஎம் ஆர்சி 390
கேடிஎம் ஆர்சி 390
கேடிஎம் நிறுவனம், ஆர்சி125 மற்றும் ஆர்சி200 பைக்குகளை தொடர்ந்து, புதிய 2வது தலைமுறை பைக்காக ஆர்சி390ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இன்னும் சில மாதங்களில் இது சந்தைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த நிறுவனத்தின் இந்திய இணையதளத்தில், இந்த பைக் பட்டியலிடப்பட்டுள்ளது. புதிய சூப்பர் ஸ்போர்ட் பைக்காக வர உள்ள இது, முந்தைய மாடலை விட 7 கிலோ குறைவாக இருக்கும். புதிய வடிவமைப்பில் எல்இடி ஹெட்லாம்ப், புளூடூத் இணைப்புடன் கூடிய டிஎப்டி டிஸ்பிளே, மியூசிக், போன் அழைப்பு வசதி, சூப்பர் மோட்டா ஏபிஎஸ் மோட், டிராக்ஷன் கன்ட்ரோல் என பல்வேறு அம்சங்களுடன் வருகிறது. இதில் உள்ள 373.2 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின், அதிகபட்சமாக 43.5 பிஎஸ் பவரையும், 37 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ₹3 லட்சத்துக்கு கீழ் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.