அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் ட்ரம்பிற்கு எதிராக குழு அமைப்பு.. நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு!!

 ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக்குளித்து இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ட்ரம்ப் தன்னுடைய பாலியல் தொடர்புகளை மூடி மறைக்க ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் 34 மோசடி வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்கு நியூயார்க் நகரில் உள்ள மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ட்ரம்ப் நேரில் ஆஜரானார்.

ட்ரம்ப் மீதான குற்றவியல் விசாரணையில் தீர்ப்பை வழங்குவதற்காக 12 நீதிபதிகள் கொண்ட குழு நேற்று நியமிக்கப்பட்டது. 7 ஆண் நீதிபதிகளும் 5 பெண் நீதிபதிகளும் கொண்ட இந்த குழு அறிவிக்கப்ட்ட சிறிது நேரத்தில், நீதிமன்றத்திற்கு வெளியே ஒருவர் திடீரென தீக்குளித்தார். இதனால் திடீரென பரபரப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக அங்கு வந்த போலீசார் தீயை அணைத்து அவரை மீட்டனர். இதைத் தொடர்ந்து, அந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்பின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்துவதால் நீதிமன்ற பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், அதனை மீறி நடைபெற்றுள்ள தீக்குளிப்பு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.