குழந்தை மாற்றிய விவகாரம் ருத்ராவுக்கு தெரிய வருமா..?
குழந்தை மாற்றிய விவகாரம் ருத்ராவுக்கு தெரிய வருமா..?
கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் “கண்ணெதிரே தோன்றினாள்”.
சக்தியாக சுவேதாவும், ருத்ராவாக மாளவிகா அவினாஷூம் நடிக்கும் இந்த தொடருக்கு குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், ருத்ராவின் குழந்தையை மாற்றி வைத்ததை நேரில் பார்த்த நர்ஸ், உடல்நிலை தேறி வருவதை பார்த்த ரத்னம், நர்ஸை கார் ஏற்றி கொல்ல முயற்சி செய்ய, விபத்தில் இருந்து தப்பும் நர்ஸை காப்பாற்றி ருத்ரா வீட்டிற்கு சக்தி அழைத்து வர, குழந்தை மாற்றிய விவகாரம் ருத்ராவுக்கு தெரிய வருமா? ரத்னம் அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்போடு தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
இந்த நெடுந்தொடரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் காணலாம்.