கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘கசட தபற’ திரைப்படம்  சின்னத்திரையில் முதன்முறையாக ஒளிபரப்பாகிறது

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘கசட தபற’ திரைப்படம் 
சின்னத்திரையில் முதன்முறையாக ஒளிபரப்பாகிறது

~மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5.00 மணிக்கு சிறப்பான வரவேற்பை பெற்ற ‘கசட தபற’ திரைப்படத்தை ரசிக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை பாருங்கள் ~

சென்னை, 24 மார்ச் 2022: வார இறுதி நாட்களில் பணிச்சுமைகளையும், கவலைகளையும் ஒதுக்கிவிட்டு குடும்பத்தினரோடு சேர்ந்து அமர்ந்து நல்ல திரைப்படத்தைப் பார்த்து ரசிப்பதை விட சிறப்பான பொழுதுபோக்கு ஏதும் இருக்கப்போவதில்லை.  இதை உறுதிசெய்வதற்காக தமிழ்நாட்டில் மாபெரும் வளர்ச்சி பெற்றிருக்கும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, அதிரடி வெற்றி பெற்ற ‘கசட தபற’ திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி ப்ரீமியரின் மூலம் இவ்வார இறுதி நாட்களில் மக்களை மகிழ்விக்க தயாராக இருக்கிறது.  இந்த சேனலின் பிரபலமான சண்டே சினி காம்போ என்பதன் ஒரு பகுதியாக மார்ச் 27, வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு இத்திரைப்படம் ஒளிபரப்பாகிறது.  ஒன்றோடு ஒன்று ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ள ஆறு கதைகளின் தொகுப்பாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.  ஒவ்வொரு கதையும் ஒரு தனித்துவமான கருப்பொருள் பற்றி பேசுகிறது.  ஆறு வெவ்வேறு நபர்கள் வாழ்க்கைப் பாதையில் சந்திப்பதையும் மற்றும் ஒருவர் மற்றொருவரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதையும் நேர்த்தியாக சித்தரிக்கின்ற இத்திரைப்படத்தை மார்ச் 27, வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு கலர்ஸ் தமிழில் கண்டு ரசியுங்கள்.
பிரபல இயக்குனர் சிம்புதேவன் எழுதி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் ஹரீஷ் கல்யான், சந்தீப் கிஷன், சாந்தனு பாக்கியராஜ், பிரியா பவானி சங்கர், சிஜா ரோஸ், ரெஜினா கஸான்ட்ரா, பிரேம்ஜி அமரன், வெங்கட் பிரபு மற்றும் விஜயலட்சுமி ஆகிய திரைப்பட நட்சத்திரங்கள் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.  சாதகமான நிலை மற்றும் பட்டாம்பூச்சி விளைவு போன்ற கோட்பாடுகளைக் கொண்டு ஆறு வெவ்வேறு கதைக்களங்களை கசட தபற சிறப்பாக பிணைக்கிறது.  
தவறவிடப்படுகின்ற ஒரு ஃபைலின் நிகழ்விலிருந்து தொடங்கும் இத்திரைக்கதை பல அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஃபைலை அவளது அலுவலகத்திலேயே தவறுதலாக விட்டுச்செல்லும் ஒரு பெண்ணுக்கும் (ரெஜினா கஸான்ட்ரா) மற்றும் அதை அவளிடம் திரும்ப ஒப்படைக்கின்ற ஒரு ஆணுக்கும் (பிரேம்ஜி அமரன்) இடையே ரொமான்ஸின் ஒரு தீப்பொறியை இது உருவாக்குகிறது.  அதே நேரத்தில் ஒரு உயிரைக் காப்பாற்றுகின்ற சாட்சியமாகவும் இந்த ஃபைல் இருக்கிறது.  அதன்பிறகு இரண்டாவது கதைக்கு இத்திரைப்படம் நகர்கிறது.  பெரும் பாதிப்பிற்கு ஆளான ஒரு பெண்ணுக்காக (விஜயலட்சமி) எதையும் செய்ய முன் வருகின்ற ஒரு இளைஞன் (பிருத்வி பாண்டியராஜன்) நல்ல நோக்கத்தோடு எடுக்கும் ஒரு நடவடிக்கை, பல நபர்கள் இறப்பிற்கு வழிவகுக்கிறது.  அதுமட்டுமின்றி, தவறே செய்யாத ஒரு அப்பாவி நபருக்கு (வெங்கட் பிரபு) தண்டனை விதிக்கப்படுவதற்கும் இது காரணமாக இருக்கிறது.  
பழைய வாழ்க்கையிலிருந்து மாறி நல்லவனாக வாழ விரும்பும் ஒரு தாதாவின் முடிவு தனது சகோதரி (வித்யா பிரதீப்) பற்றிய உண்மையை அறிந்து கொள்வதனால் ஒரு போலீஸ் அதிகாரியின் (சந்தீப் கிஷன்) திருமணத்தையே சீரழிக்கிறது.  தவறவிடப்படும் ஒரு மொபைல் போன், ஒரு துடிப்பான இளைஞனால் (ஹரீஷ் கல்யாண்) அவரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்போது இந்த உண்மை அந்த போலீஸ் அதிகாரிக்கு தெரிய வருகிறது.  ஒரு குளிர்பானத்தை பகிர்ந்து கொள்கின்ற அவரது செயல்பாடு எண்ணற்ற குழந்தைகளின் வாழ்க்கையை பேராபத்தில் சிக்க வைக்கும் என்ற உண்மை தெரிந்ததற்குப் பிறகு அந்த இளைஞனின் மனதில் மாற்றம் ஏற்படுகிறது.  இந்த அத்தியாயங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து கிளைமேக்ஸை நோக்கி நகர்கின்றன. இத்திரைப்படத்தின் கிளைமேக்ஸ், நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
தொலைக்காட்சியில் இத்திரைப்படம் முதன் முறையாக ஒளிபரப்பாவது குறித்து இதன் இயக்குனர் சிம்புதேவன் கூறியதாவது: “இத்திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதனால் இன்னும் பரவலான ரசிகர்களை சென்றடைவதற்கு இது நிச்சயம் உதவும்.  பல்வேறு கோட்பாடுகள் மற்றும் ஒப்பீடுகளைப் பயன்படுத்தி வெவ்வேறு உணர்வுகளை பிரதிபலிக்க கசட தபற திரைப்படத்தில் ஒரு வேறுபட்ட வழிமுறையை நாங்கள் முயற்சித்திருக்கிறோம்.  இத்திரைப்படம் சிறப்பாக அமைய திரைப்படக் குழுவில் உள்ள ஒவ்வொருவருமே பெரும் முயற்சிகளையும், சிறப்பான பங்களிப்புகளையும் செய்திருக்கின்றன.  திரைப்பட படைப்பாக்கத்தில் எமது வித்தியாசமான அணுகுமுறையை பார்வையாளர்கள் நிச்சயம் ரசித்துப் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்.”
வழக்கமான திரைக்கதைகளிலிருந்து மாறுபட்டிருக்கும் கசட தபற திரைப்படத்தை சின்னத்திரையில் கண்டுரசிக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை 2022 மார்ச் 27 ஞாயிறன்று மாலை 5.00 மணிக்கு பாருங்கள்.  அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். பார்வையாளர்கள் அவர்களது சௌகரியமான நேரத்தில் இந்நிகழ்ச்சிகளைப் பார்க்க எந்தநேரத்திலும் VOOT – ஐ டியூன் செய்யலாம்.