புதியதலைமுறை நிகழ்ச்சி “முதல்காட்சி”
“முதல்காட்சி”
புதிய தலைமுறையில் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சியாக நாள்தோறும் ஒளிபரப்பாகி வருகிறது“முதல்காட்சி” என்ற நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி நாள்தோறும் மாலை 6:30 மணிக்கு புதிய தலைமுறையில் ஒளிபரப்பாகி வருகிறது.
மூன்று பகுதிகளாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு பகுதியும் சுவையான தகவல்களைத் தாங்கி வருகிறது. கருப்பு வெள்ளை காலத்திலிருந்து திரைப்படங்களின் கருத்தாக்கம் , பாடல், உடை, தொழில்நுட்பங்கள் என்று அதன் பிரணாமங்கள் முதல் நிகழ்கால திரைப்படங்களின் சிறப்புகள் வரை ஒட்டுமொத்த திரைப்படங்களின் தொகுப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. திரையரங்கம் மற்றும்
ஓ டி டி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொடர்களும் அதன் விமர்சனங்களும் வாரந்தோறும் பார்வையாளர்களுக்கு முன்வைக்கப்படுகின்றன.
திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் நேர்காணல்கள், பாடல் வெளியீடு என்பதோடு அந்தந்த திரைப்படங்களைப் பற்றிய சுவையான தகவல்களையும் நிகழ்ச்சி தாங்கி விருகிறது. விமர்சனங்களைத் தாண்டி திரைக்கலைஞர்களின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கி வரும் முதல் காட்சி நிகழ்ச்சி புதியதலைமுறையின் தொகுப்பாளர்களால் வழங்கப்படுகிறது.