நடாஷா ஸ்டான்கோவிக் உடனான காதலை உறுதி செய்த கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா

நடாஷா ஸ்டான்கோவிக் உடனான காதலை உறுதி செய்த கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா

நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் உடனான காதலைத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதி செய்துள்ளார் ஹர்திக் பாண்டியா

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக விளையாடி வந்தார் ஹர்திக் பாண்டியா. சில மாதங்களுக்கு முன்பு கடும் முதுகு வலியால் அவதிப்பட்டார். அதனைத் தொடர்ந்து முதுகு வலிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு கொஞ்சக் கொஞ்சமாகப் பழைய நிலைக்குத் திரும்பி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பில் இருந்தே ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிக் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இருவருமே காதல் செய்திகள் தொடர்பாக எதுவும் கருத்து தெரிவிக்காமல் இருந்தனர்.

செர்ஃபியன் நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக் இந்தியில் 'சத்யாகிரகஹா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் பாடல்களுக்கு நடனமாடியுள்ளார். தமிழில் 'அரிமா நம்பி' படத்தில் 'நான் உன்னில் பாதி' என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

படங்களைத் தாண்டி நடாஷா பிரபலமானது 'பிக் பாஸ் 8' நிகழ்ச்சியின் மூலமாகத் தான். இதில் ஒரு மாதத்துக்கும் மேலாக பிக் பாஸ் வீட்டிற்குள் தங்கியிருந்தார். அதில் இவரது செயல்பாடுகள் மூலம் இந்தி மக்களிடையே பிரபலமானவர். இவரும் ஹர்திக் பாண்டியாவும் காதலித்து வருவது உறுதியாகியுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் காதலித்து வருவதை உறுதி செய்திருக்கிறார்கள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் மோதிரம் மாற்றிக் கொண்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர். மேலும், இருவரும் முத்தமிட்ட கொண்ட வீடியோவையும் பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.