ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சலுகை: ரிசர்வ் வங்கி பரிசீலனை

ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சலுகை: ரிசர்வ் வங்கி பரிசீலனை

ரியல் எஸ்டேட் துறையில் போதிய நிதி இல்லாமல் பல திட்டப் பணி கள் பாதியிலேயே முடங்கியுள்ளன. இத்தகைய திட்டப் பணிகளை முடிப்பதன் மூலம் இத்துறையை முடுக்கிவிட முடியும் என அரசு கருதுகிறது. இதன் ஒரு பகுதியாக வாராக் கடன் என்ற வரம்பில் சிக்கியுள்ள ரியல் எஸ்டேட் நிறு வனங்களுக்கு மேலும் கடன் வழங்கி திட்டப் பணிகளை முடிப் பது குறித்து ஆர்பிஐ ஆராய்ந்து வருகிறது. அல்லது சிறப்பு நிதி என்ற அடிப்படையில் கூடுதல் நிதியை அளிக்கலாமா என்பதும் ஆர்பிஐ பரிசீலனையில் உள்ளது.

ஒட்டுமொத்தமாக அனைத்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் வழங்குவதைவிட, குறிப்பிட்ட திட்டப் பணிகளை நிறைவேற்றி னால் அதன் மூலம் பலன் கிடைக் கும் என்பதை வங்கிகள் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.

இந்த கடன் சலுகை திட்டமானது தற்காலிக நடவடிக்கை மட்டுமே. ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் திட்டப் பணிகளை ஆராய்ந்து நிறுவ னங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை மற்றும் எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதைக் கணக் கிட்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வங்கிகள் பரிந்துரைக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் திட்டப் பணிகளை ரிசர்வ் வங்கி கண்காணிப்புக் குழு ஆராய்ந்து இந்த கடன் சலுகையை வழங்க பரிந்துரைக்கும்.

ரியல் எஸ்டேட் துறையில் 4.58 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப் படாமல் இருப்பதாகவும், இப் பணிகளை முடிக்க ரூ.25 ஆயிரம் கோடி தேவை எனவும் சமீபத் தில் நடத்தப்பட்ட கணக்கெடுப் பில் தெரியவந்துள்ளது. பொருளா தார வளர்ச்சியில் நெருங்கிய தொடர் புடைய ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியை முடுக்கி விட அரசும், ரிசர்வ் வங்கியும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டில் 1,600 ரியல் எஸ்டேட் திட்டப் பணிகள் முடங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சிறப்பு சலுகை அடிப்படையில் முடங்கிப் போயுள்ள கட்டுமானப் பணிக்கு தேவையான நிதியை வழங் கலாம் என ஒப்புக் கொள்ளப் பட்டது.