குரூப்-4 தேர்வு கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!

குரூப்-4 தேர்வு கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!
 

குரூப்- 4 பணிகளுக்காக கூடுதலாக 484 இடங்கள் காலிபணியிடங்கள் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைம் அறிவித்துள்ளது. 2019- 20 ஆண்டுக்கான பல்வேறு குரூப் 4 பணிகளுக்காக 6491 காலியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டது அப்பணிகளுக்காக 2019 செப்டம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் பல்வேறு துறைகளில் இருந்து பெறப்பட்ட 2907 கூடுதல் இடங்களை சேர்த்து மொத்தம் 9398 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூடுதலாக 484 இடங்களைச் சேர்த்து மொத்தம் 9882 காலிபணியிடங்கள் உள்ளன என்று அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட காலியிடங்களுக்கான கலந்தாய்வு விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.