கோவையில், நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை

கோவையில், நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. இவர் கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றார். ஆனால் அப்போது பல் மருத்துவம் படிக்கவே வாய்ப்பு கிடைத்த நிலையில் அதை நிராகரித்துள்ளார்.

பொதுமருத்துவம் படிக்க ஆசைப்பட்ட சுபஸ்ரீ இந்தாண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதனிடையே இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த முறையும் மதிப்பெண்கள் குறைந்துவிடுமோ என்று சுபஸ்ரீ மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.