நாங்கள் எப்போது அப்படி சொன்னோம்? பாரதிய கிசான் யூனியன் தலைவர் பேட்டி

மாநிலங்களவையில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை நியாயப்படுத்தி பேசினார். புதிய வேளாண் சட்டங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை தொடரும் என்றும் கூறினார். விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும், பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருக்கிறது என்றும் மோடி குறிப்பிட்டார்.

இதுபற்றி பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயித் கூறியதாவது

குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) முடிவுக்கு வருகிறது என்று நாங்கள் எப்போது சொன்னோம்? குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றுதான் நாங்கள் கூறினோம். அத்தகைய சட்டம் அமைக்கப்பட்டால், நாட்டின் அனைத்து விவசாயிகளும் பயனடைவார்கள். 

இப்போது, குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்காக எந்த சட்டமும் இல்லை. விவசாயிகள் வியாபாரிகளால் கொள்ளையடிக்கப்படுகிறார்கள்.