சாலையை காணவில்லை எனக் கூறி கிராம மக்கள் போஸ்டர்

சாலையை காணவில்லை எனக் கூறி கிராம மக்கள் போஸ்டர்
சாலையை காணவில்லை எனக் கூறி கிராம மக்கள் போஸ்டர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் புதிதாக போடப்பட்ட சாலையை காணவில்லை எனக் கூறி கிராம மக்கள் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் புதிதாக போடப்பட்ட சாலையை காணவில்லை எனக் கூறி கிராம மக்கள் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தூர் நகராட்சிக்குட்பட்ட மேலகாந்திநகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்ததுள்ளன. ஆனால் தற்போது இரண்டு மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 

இருப்பினும் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் மூடபடாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு அப்படியே உள்ளதால் மக்கள்

இந்நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி விடுவதால் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், சாலைகளை காணவில்லை என இளைஞர் பெருமன்றம் சார்பில் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. சாலைகளை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்க தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் போராட்டம் நடைபெறும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.