“பாடவா என் பாடலை”

“பாடவா என் பாடலை”

வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய நிகழ்ச்சி பாடவா என் பாடலை’. திரைத்துறையில் பிரபலமான பின்னணி பாடகர்கள், அவர்கள் எப்படி திரைத்துறைக்கு வந்தார்கள், அவர்களுடைய பின்புலம் என்ன, முதல் வாய்ப்பு எப்படி கிடைத்தது, முதல் பாடல் பாடிய, ஒளிப்பதிவு செய்யப்பட்ட அந்த அனுபவம் எப்படி இருந்தது, அவர்களுக்கு சிறுவயதில் இருந்தே இசை ஆர்வம் எப்படி தோன்றியது, எந்த இசையமைப்பாளர்களிடமிருந்து  இருந்து இசையைக் கற்றுக் கொண்டார்கள் என இப்படி பல விஷயங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்

இவற்றுடன் தங்களது சொந்த விஷயங்களையும் பகிர்ந்துகொள்கிறார்கள். பாலாஜி என்பவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி வேந்தர் டிவியில் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதன் மறு ஒளிபரப்பு ஞாயிறு இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.