"ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வில் ஒளியேற்ற தமிழக அரசு ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும்" - மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

"ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வில் ஒளியேற்ற தமிழக அரசு ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும்"  - மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
"ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வில் ஒளியேற்ற தமிழக அரசு ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும்" - மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

"ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வில் ஒளியேற்ற தமிழக அரசு ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும்"

 - மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

 

கொரோனா நோய் தொற்று காரணமான ஊரடங்கினால் பொதுப்போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்ததாலும், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த பணியாளர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அரசு அறிவுறுத்தியதாலும், ஆட்டோ ஓட்டுனர் தொழிலை நம்பியிருந்த பல லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது. 

 

அதுமட்டுமின்றி கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஊரடங்கு காலகட்டத்தில் கூட மனசாட்சியின்றி எண்ணெய் நிறுவனங்கள் வாகன எரிபொருளான பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே போக மத்திய, மாநில அரசுகள் தங்களின் பங்கிற்கு விற்பனை வரியை உயர்த்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலை செய்தன. 

 

ஏற்கனவே ஊரடங்கில் பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்ட நிலையிலும், தளர்வு காலத்தில் போதிய வருமானமின்றியும் ஆட்டோ ஓட்டுனர்கள் தவித்த போதும் கூட, ஆட்டோக்களுக்கான சாலை வரி, காப்பீடு, வங்கி தவணை என எதையுமே ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முன் வராதது கவலையளிப்பதாக இருக்கிறது. 

 

மேலும் புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு வேலைக்கு செல்லும் மகளிரை அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கும் சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்தது. வரவேற்பிற்குரிய திட்டம் என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்தில்லை. அதன் காரணமாக மகளிர் ஆட்டோவில் பயணிப்பது குறைந்துவிட்டது. வருமானக்குறைவு, பெட்ரோல் விலை உயர்வு என்று கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வாழ்வாதாரத்தை இழந்து, கடுமையாக பாதிப்போடு, இருள் சூழ்ந்து போயுள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வில் இனிமேலாவது ஒளியேற்றிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்கள் கவலைகளை கருத்தில் கொண்டு அவர்கள் இன்னல் களைய அரசு அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டோர் சார்பானவார்கள் பங்கேற்கும் ஆலோசனைக்குழு ஒன்றினை அரசு அமைத்து அந்த குழு எடுக்கும் முடிவின்படி ஆட்டோ தொழிலாளர் வாழ்வில் விளக்கேற்ற வேண்டுமென என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பிலும், நம்மவர் தொழிற்சங்க பேரவை சார்பிலும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். 

 

நன்றி.

 

சு.ஆ.பொன்னுசாமி

மாநில செயலாளர்,

மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி. 

 

மாநில தலைவர்

நம்மவர் தொழிற்சங்க பேரவை.