அமேதிக்கு இன்று புதிய விடியல் - ஸ்மிரிதி இரானி

அமேதிக்கு இன்று புதிய விடியல் - ஸ்மிரிதி இரானி

அமேதி: பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி, ராகுலை விட 55,120 வாக்குகள் 
அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 4,67,598 ஆகும். 

இந்நிலையில் தனது வெற்றி குறித்து கூறிய ஸ்மிரிதி இரானி கூறியதாவது:

அமேதிக்கு இன்று புதிய விடியல். இந்த வெற்றி புதிய உறுதியை அளிக்கிறது. அமேதி மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமேதியை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் நம்பிக்கையை வாக்குகளாக செலுத்தியுள்ளீர்கள். தாமரையை அமேதியில் மலர வைத்துள்ளீர்கள். அமேதி தொகுதிக்கு பணியாற்ற என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். 

நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை போன்று செயல்பட்டோம். தொண்டர்களின் மிகச்சிறப்பான பணிகளால் வென்றுள்ளோம். கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்த பாஜக தொண்டர்களின் குடும்பங்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.