SRM வள்ளியம்மை பட்டமளிப்புவிழா
பட்டமளிப்புவிழா- வாழ்க்கையில்வெற்றிபெறஐந்துவழிகள்
SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 15வது பட்டமளிப்பு விழாவானது 06.07.19 அன்று கல்லூரிவளாகத்தில் அமைந்துள்ள முனைவர் தி.பொ.கணேசன் அரங்கத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக புதுமை விரும்பி மற்றும் வெற்றியின் வெளிச்சம் என்று சொல்லப்படும் ஆக்சஞ்சர் மென்பொருள் நிறுவனத்தின்நிர்வாக இயக்குநர் திருசாத்தப்பன்நாராயண் அவர்கள் கலந்து கொண்டு அண்ணாபல்கலைக்கழ கதரவரிசைபட்டியலில் இடம்பெற்ற 13 மாணவர்களுக்கு பதக்கங்களும் பாராட்டுச்சான்றிதழ்களும் மற்றும்பட்டங்களை வழங்கி கெளரவித்தார்.மேலும் பல்வேறு துறைகளில் பயின்ற 829 மாணவர்களுக்கு பட்டம் வழங்கிச்சிறப்பித்தார்.
இவர் தனது பட்டமளிப்பு விழா உரையில் நம்வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமானால், இந்த ஐந்து வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவற்றில் முதலாவதாக நமக்குமிகவும் பிடித்தமானதுறையை தேர்வுசெய்வது அதில் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். நமக்கு என்று என்ன திறமை உள்ளது என்பதை அடையாளம் கண்டு அதற்கேற்றவாறு துறையைதேர்வு செய்துஅதில் இன்முகத்துடன் ஈடுபடவேண்டும்.
மகாத்மாகாந்தி அவர்கள் கூறியதுபோல, எந்த வேலையை செய்தாலும், ஒருஅன்புடன், பற்றுடன், ஈடுபாட்டுடன், அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும்; இல்லையேல் அந்தவேலையை செய்யக்கூடாது என்று கூறினார். அடுத்தவழிமுறையாக நம்பணியாற்றும் தொழில்நுட்ப இடங்களில் தொழில்நுட்ப தொலையறிவை 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் மாற்றியமைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நம்மிடம் வரும் உரிமையாளர்களின் (பயனர்களின்)பார்வையறிவை நாம்தெரிந்து கொண்டு,அதை சரிசெய்து அவர்களுக்கு ஏற்றாற்போல இயங்க வேண்டும்.அவர்களுக்கான தேவையை அறிந்து நிறையபுதிய கண்டுபிடிப்புகளைகண்டு உணரவேண்டும் . புதுப்பித்தல் என்பது புதியகண்டு பிடிப்புகிடையாது. எந்தெந்தவழி முறைகளில் உரிமையாளர்களை (பயனர்களை)கவரலாம்; அவர்களுக்கு ஏற்றவகையில் அவர்களுக்கான தேவைகளைநிறைவு செய்யும்வழி முறையேபுதுப்பித்தல் என்பதாகும். மேலும் அவர் கூறிய நான்காவது வழிமுறை என்பது எந்த வேலையை எடுத்துசெய்தாலும் அல்லது செய்யச் சொன்னாலும். அது நம்மால் முடியாது என்று நினைக்காமல், அந்த வேலையில் உள்ள கடினத்தை சவாலாக எடுத்துக் கொண்டு, நம்மால் முடியாதது யாராலும்முடியாது; யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்ற வகையில் செயலாற்ற வேண்டும் என்றும் கூறினார். வாழ்க்கையில் வெற்றிபெற கடைசி வழிமுறையாக, நம்மிடம் உள்ள திறமையை மிகைப்படுத்தி சொல்லும்போதும், செயலாற்றும்போதும் நமக்கு மிகப் பெரியஅளவிலான அங்கீகாரம் கிடைக்கும் என்று கூறினார்.
இந்த இனியநாளில், SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் முனைவர். சந்தீப் சஞ்செட்டி அவர்கள் பட்டமளிப்பு விழாவை தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வில், SRM வள்ளியம்மைபொறியியல்கல்லூரியின்இயக்குனரும், SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணைத் துணைவேந்தருமான முனைவர். தி.பொ.கணேசன் கலந்து கொண்டு வரவேற்புரையாற்றினார்.
மேலும்,கல்லூரியின்முதல்வர்முனைவர். பா. சிதம்பரராஜன் அவர்கள் கடந்த கல்வியாண்டில் கல்லூரியில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் உள்ளடக்கிய பட்டமளிப்பு நாள் அறிக்கையை வாசித்தார்.