திருத்தணி​​​​​​​ பருவமழை முன்னெச்சரிக்கையாக பாலம், மழைநீர் கால்வாய் சீரமைப்பு

திருத்தணி​​​​​​​ பருவமழை முன்னெச்சரிக்கையாக பாலம், மழைநீர் கால்வாய் சீரமைப்பு
திருத்தணி​​​​​​​ பருவமழை முன்னெச்சரிக்கையாக பாலம், மழைநீர் கால்வாய் சீரமைப்பு

திருத்தணி பருவமழை முன்னெச்சரிக்கையாக பாலம், மழைநீர் கால்வாய் சீரமைப்பு


திருத்தணி: பருவ மழை பெய்துவருவதை தொடர்ந்து திருத்தணி பகுதியில் சிறுபாலம், மழைநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவ மழையால் சாலைகள், சிறுபாலம் மற்றும் மழைநீர்வடிகால்வாய்களில் தண்ணீர் தேங்கி நிற்பதை தடுக்கும் வகையில் திருத்தணி மாநில நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பு மற்றும் தூர்வாரும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் கோட்ட பொறியாளர் ஞானவேல் அறிவுறுத்தலின்படி, திருத்தணி உதவி கோட்ட பொறியாளர் கார்த்திகேயன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் மூலம் நெடுஞ்சாலையில் உள்ள சிறுபாலம் மற்றும் பாலம் கீழ் நீரோட்ட பாதையில் இருக்கும் செடி, கொடிகள், புதர்களை அகற்றி வருகின்றனர்.

சாலையோரம் வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றும் பணி துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தேவையான ஜல்லி, மணல் மூட்டைகள், சவுக்கு கொம்புகள், மரம் அறுப்பான்கள் மற்றும் நீர் இரைப்பான்கள் ஆகியவை திருத்தணி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது