சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு

புதுடெல்லி: சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம், காலாண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில், வருகிற ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிவித்தது. இது, 0.1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 

வங்கிகள், வட்டி விகிதத்தை குறைத்ததற்கு ஏற்ப இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொது வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரம் ஆகியவற்றுக்கான வட்டி 8 சதவீதத்தில் இருந்து 7.9 சதவீதமாகவும், செல்வ மகள் சேமிப்பு திட்ட வட்டி, 8.5 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாகவும், கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி 7.7 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. குறுகிய, நீண்ட கால டெபாசிட்டுகளுக்கும் வட்டி குறைக்கப்பட்டுள்ளது.