‘ஆட்ட நாயகன்’

‘ஆட்ட நாயகன்’

கிரிக்கெட் தொடர்பான ‘ஆட்ட நாயகன்’ நிகழ்ச்சி புதிய தலைமுறையில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகுகிறது.

ஒவ்வொரு நாளும் 10 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் அடங்கிய சக்கரம் திரையில் வரும். அதில் ,நேயர்கள் தங்களுக்கு விருப்பமான கேள்வியை தேர்வு செய்து பதில் அளிக்கலாம். சரியான பதில் கூறும் நேயர்களுக்கு பரிசுகள் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகின்றன.

வீடியோ, ஆடியோ, புகைப்படம், இரண்டு சம்பவங்களுக்கான தொடர்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக கேள்விகள் இடம் பெறுகின்றன. கிரிக்கெட்டில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை மீண்டும் நினைவுகூரும் வகையில் உள்ள கேள்விகளுக்கு, நேயர்கள் சரியான பதில்களை சொல்லி பரிசுகளை அள்ளுகின்றனர்.

ஆட்ட நாயகன் நிகழ்ச்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே நேயர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.