பெண்களுக்கு தேவையான பயனுள்ள நிகழ்ச்சி - "ஓகே கண்மணி"

பெண்களுக்கு தேவையான பயனுள்ள நிகழ்ச்சி - "ஓகே கண்மணி"

நவீன வாழ்க்கையை நோக்கி பயணிக்கும் பெண்கள் அவர்களுக்கான நேரம் ஒதுக்குவது தற்பொழுது குறைந்து வருகிறது. அதிலும் அவர்களது ஆரோக்கியம் ,அழகு ,குழந்தைகளை பார்ப்பது என எக்கச்சக்க சந்தேகங்களுக்கும் தீர்வளிக்கும் வகையில் முதல் முறையாக உங்கள் மூன் தொலைக்காட்சியில் ஓகே கண்மணி எனும் புத்தம் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது .

ஓகே கண்மணி நிகழ்ச்சியில் தினமும் பெண்களுக்கு  முக்கியம் தரும் வகையில் மூன்று  பயனுள்ள  பெண்கள்  எப்பொழுதும்  அவர்களது  உடலை ஆரோக்கியமாக  வீட்டிலிருந்தே  தெரிந்து கொள்ள உதவும் முதல் பகுதி தான் பிட்நெஸ் தோழி (Fitness தோழி ).

பெண்கள் நவீன காலத்து குழந்தைகளை எப்படி  பேணி காப்பது என  ஆரோக்கியமான அறிவுரைகளுடன்  கூடிய இரண்டாவது  பகுதி தான் அழகு குட்டி செல்லம்.

கோடை காலத்தில்  பாதுகாக்க  வேண்டிய  முறைகளை  சுவை பட கூறுவதே ஆஷ் டேக் சம்மர் ( #tag summer).

போன்ற  விறுவிறுப்பு தொகுப்புகளுடன் பெண்களுக்கு தேவையான ஒரு  பயனுள்ள  நிகழ்ச்சி .இதனை வினோத் குமார் பாண்டியன் தயாரிப்பில் தொகுப்பாளினி தனுஜா தொகுத்து வழங்குகிறார் .இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11.30 மணிக்கு மூன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.