சதர்ன் ஹெல்த் ஃபுட்ஸ் வழங்கும் மன்னா கோ கிரெயின்ஸ்

சதர்ன் ஹெல்த் ஃபுட்ஸ் வழங்கும் மன்னா கோ கிரெயின்ஸ்

~MFD சந்தையில் 7000+ கோடியை எட்டியுள்ளது~

பிரபல சத்துணவு மிக்ஸ் ‘மன்னா’ பிராண்டின் தயாரிப்பு நிறுவனமான சதர்ன் ஹெல்த் ஃபுட்ஸ் பிரைவட் லிமிடட், இன்ஸ்டண்ட் சத்துணவுகளின் 6000 கோடி சந்தையை எட்டியுள்ளது. இதன் தொடக்கமாக, மன்னா கோ கிரெயின்ஸ் என்ற புதிய பலதானிய உணவை அறிமுகம் செய்துள்ளது சதர்ன் ஹெல்த் ஃபுட்ஸ் நிறுவனம்.

குழந்தைகளுக்காக பிரத்யேகமான முறையில் தயாரிக்கப்பட்ட மன்னா கோ கிரெயின்ஸ் இன்ஸ்டண்ட் மிக்ஸ், பலதானியங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் வளர்ச்சிக்கும், ஆற்றலுக்கும் தேவையான பால், பருப்பு, புரதச்சத்துக்கள் உள்பட 24 வகை முக்கிய சத்துக்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மன்னா கோ கிரெயின்ஸில் 7 வகையான தானியங்கள் (ராகி, ஜோவர், பஜ்ரா; கோதுமை, சோளம், பார்லி; கொண்டைக்கடலை) ஆகியவை உள்ளன. சத்து நிறைந்த மன்னா கோ கிரயின்ஸ் குழந்தைகளின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, உடல் ஆற்றல், வலுவான எலும்புகள், எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு ஏற்றது. மன்னா கோ கிரயின்ஸ் மிக்ஸை குடிக்கும் ஒவ்வொரு முறையும், உடல் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின், மினரல்ஸ் உள்பட 24 சத்துக்கள் கொண்ட 33% RDAகுழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது.

மன்னா கோ கிரெயின்ஸின் அறிமுகம் பற்றி பேசிய சதர்ன் ஹெல்த் ஃபுட்ஸ் தலைமை நிறுவனர் திரு. முருகன் நாராயணசாமி, "வாடிக்கையாளர்களின் உணவு முறைகளில் அதிக சத்துக்களை கொண்டு சேர்க்க வேண்டுமென்பது மன்னா நிறுவனத்தின் முக்கிய நோக்கம். பல தானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள மன்னா கோ கிரயின்ஸ் இன்ஸ்டண்ட் மிக்ஸ் குழந்தைகள் விரும்பும் சுவையில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஆரோக்கியமான சத்து பானத்தை குழந்தைகளுக்கு கொடுக்க அம்மாக்களும் கண்டிப்பாக விரும்புவார்கள்” என்றார்

மன்னா கோ கிரெய்ன்ஸ் மிக்ஸின் அறிமுகத்தின் முதல் பகுதியாக, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் 360 டிகிரி ஊடக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும், டிஜிட்டல் தளங்களிலும் இது குறித்த விளம்பரங்கள் வெளியாக உள்ளன.

மன்னா கோ கிரெய்ன்ஸ்தொலைக்காட்சி விளம்பர விழிப்புணர்வு மூலம் வெற்றி பெறுவதற்காக உழைப்பதன் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தன்னுடைய குழந்தை வெற்றி பெறுவது மட்டுமின்றி நல்ல முறையில் வெற்றி பெற வேண்டும் என்பது ஒவ்வொரு தாயாரின் விருப்பமாக இருக்கும். எனவே, வெற்றி பாதையை தேடிச் செல்லும்போது நண்பர்களையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும், உதவி செய்ய வேண்டும் எனும் நற்பண்பை குழந்தைகளிடம் விதைக்க இந்த விளம்பரம் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதை போலவே குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களை தருவதைவிடவும் சிறந்தது ஆரோக்கியமான தானியச் சத்துக்களை குழந்தைகளுக்கு கொடுப்பது சிறந்தது என அம்மாக்களும் தெரிந்து கொள்வார்கள்.