தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

திருப்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.