கரோனா - நான்கு கட்டங்களில், இந்தியா இரண்டாவது கட்டத்தில் உள்ளது

கரோனா - நான்கு கட்டங்களில், இந்தியா இரண்டாவது கட்டத்தில்  உள்ளது

நான்கு கட்டங்களாகப் பாதிப்பை ஏற்படுத்தும் கரோனா குறித்துக் கூறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்தியா இரண்டாவது கட்டத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

முதல் நிலை: பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருவது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படுவது.

2-ம் நிலை: பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து குடும்பத்தினருக்கோ, நண்பர்களுக்கோ கரோனா தொற்று ஏற்படுவது. இதில் குறைவான நபர்களே பாதிக்கப்படுவர். யாரிடம் இருந்து தொற்று ஏற்பட்டிருப்பது என்பதை எளிதாகக் கண்டறிய முடியும். இதனால் வைரஸ் சங்கிலியை அறுத்தெறிய முடியும்.

3-ம் நிலை: இது சமூகத் தொற்று ஏற்படும் கட்டம். யார் மூலம் தொற்று ஏற்பட்டது என்றே தெரியாமல் சமூகத்தில் பரவலான மக்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவது. இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் 3-ம் கட்டத்தில் உள்ளன.

4-ம் நிலை: இதுதான் மிகவும் மோசமான நிலை. எப்போது தொற்று குணமாகும், முடியும் என்றே தெரியாமல் ஏற்படும் பேரிடர். சீனாவில் இதுதான் நடந்தது

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா சுமார் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுளது. இந்த வைரஸுக்கு இதுவரை 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.