தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும் - இந்திய வானிலை மையம்

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும் - இந்திய வானிலை மையம்
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும் - இந்திய வானிலை மையம்

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும் - இந்திய வானிலை மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரண்டாம் நாளாக இரவு நேரத்தில் மழை விட்டு விட்டு பெய்த நிலையில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய தொடர்ந்து பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்தது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 

வாகன ஓட்டிகள் அலுவலகங்களுக்கும், வீடுகளுக்கும் செல்வதற்கு கடும் சிரமம் ஏற்பட்டது. 

இந்நிலையில் நேற்று இரவும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரண்டாம் நாளாக விட்டு விட்டு மழை பெய்தது. 

ஏற்கனவே பெய்த மழை காரணமாக தியாகராய நகர், ராயப்பேட்டை, கோடம்பாக்கம், வியாசர்பாடி, போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

நேற்றிரவு சற்று மழை ஓய்ந்தாலும் மேற்கண்ட பகுதிகளில் மழை நீர் வடியாத நிலை காணப்படுகிறது. 

சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஆங்காங்கே ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் கன மழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி நிலவி வரும் நிலையில், தென்கிழக்கு வளைகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடற்கரையை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.