உள்நாட்டு விமான போக்குவரத்து கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல அனுமதி

உள்நாட்டு விமான போக்குவரத்து கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல அனுமதி

உள்நாட்டு விமான போக்குவரத்து கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல அனுமதி

 

புதுடெல்லி,

இரண்டு மாத  தடைபட்டு இருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து கடந்த மே மாதம் 25-ந் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது. அப்போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக உள்நாட்டு விமான பயணிகள் ஒரே ஒரு செக்-இன் லக்கேஜ் மற்றும் ஒரு கைப்பையை மட்டும் எடுத்து செல்லலாம் என விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்து இருந்தது.

 

இந்த நிலையில், தற்போது பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு விமான போக்குவரத்து அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன்படி விமான போக்குவரத்து நிறுவனங்கள் தங்களது பேக்கேஜ் உச்சவரம்பு கொள்கையின்படி லக்கேஜ்களை எடுத்து செல்ல பயணிகளை அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பயணிகள் உள்நாட்டு விமானங்களில் கூடுதல் உடைமைகளை எடுத்துச் செல்ல முடியும்.