தேசிய அளவிலான கபடி போட்டியில் வேலம்மாள் பள்ளியின் பாராட்டுக்குரிய சாதனை .
தேசிய அளவிலான கபடி போட்டியில் வேலம்மாள் பள்ளியின் பாராட்டுக்குரிய சாதனை .
சமீபத்தில் ஈரோடு
மாவட்டத்தில் உள்ள நத்தக்காடையூரில் உள்ள பில்டர்ஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த தேசிய அளவிலான கபடி போட்டி -2021ல்,
பதினான்கு வயதிற்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற
பருத்திப்பட்டு வேலம்மாள் வித்யாலயா
பள்ளியின் ஆடவர் அணி இப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது.
15 அணிகளுக்கு இடையே நடைபெற்ற இப்போட்டியின் இறுதிப்போட்டியில்
தர்மபுரி மாவட்ட அணியை எதிர்கொண்ட வேலம்மாள் அணி
31 க்கு 28 என்ற புள்ளிக்கணக்கில் தனது செயல்திறனைவெளிப்படுத்தியது.
இந்தத் தேசிய அளவிலான போட்டியில் வேலம்மாள் பள்ளியின் அணிகள், கூடைப்பந்து, கபடி, கோ-கோ போன்ற பல்வேறு விளையாட்டுகளின்
பதினான்கு வயதிற்குட்பட்டோர் மற்றும் பதினேழு வயதிற்குட்பட்டோர் பிரிவுகளில் பங்கேற்று,
தங்கள் பாராட்டத்தக்க செயல்திறனுடன் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்களாத் தமது திறனை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்வைப் பள்ளி விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை நடத்தியது, இதில் மாநிலம் முழுவதும் உள்ள அணிகள் பங்கேற்றன. இந்த அணிகளில் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, மலேசியாவில் விரைவில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ளனர். மாணவர்களின் முயற்சிகளுக்குப் பள்ளி நிர்வாகம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து,
வெற்றியின் உச்சங்களை அடைய அவர்களை ஆசீர்வதிக்கிறது.