உலகத் தொலைக்காட்சியில் முதல்முறையாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் த்ரில்லர் திரைப்படம் 100

உலகத் தொலைக்காட்சியில் முதல்முறையாக  கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் த்ரில்லர் திரைப்படம் 100
உலகத் தொலைக்காட்சியில் முதல்முறையாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் த்ரில்லர் திரைப்படம் 100
உலகத் தொலைக்காட்சியில் முதல்முறையாக  கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் த்ரில்லர் திரைப்படம் 100
உலகத் தொலைக்காட்சியில் முதல்முறையாக  கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் த்ரில்லர் திரைப்படம் 100
உலகத் தொலைக்காட்சியில் முதல்முறையாக  கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் த்ரில்லர் திரைப்படம் 100

உலகத் தொலைக்காட்சியில் முதல்முறையாக

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் த்ரில்லர் திரைப்படம் 100

-----------

~ செப்டம்பர் 19 முதல் வாரத்தின் ஏழு நாட்களும் இடைவிடாத பொழுதுபோக்கு

நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களையும் வழங்கவிருக்கிறது~

 

சென்னை, செப். 16- தமிழகத்தின் சிறந்த பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் அதன் பிரபல தொடர்களான பொம்மி B.A.B.L, இதயத்தை திருடாதே, அபி டெய்லர், சில்லுனு ஒரு காதல் ஆகியவற்றை வாரத்தின் ஏழு நாட்களும் ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 19-ந்தேதி முதல் கலர்ஸ் தமிழின் பார்வையாளர்கள் அவர்களுக்கு பிடித்த தொடர்களை இனி திங்கள் முதல் ஞாயிறு வரை புதிய நேரத்தில் பார்த்து மகிழலாம். 

உற்சாகத்தை மேலும் உயர்த்தும் வகையில் கலர்ஸ் தமிழ் அதன் பிரபல சன்டே சினி ஜம்போவின்  ஒரு பகுதியாக உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக அதர்வா நடித்து 2019-ம் ஆண்டில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான 100 திரைப்படத்தை செப்டம்பர் 19-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கும் மாலை 3 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது. சாம் ஆன்டன் இயக்கி உள்ள இந்த படத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இந்த திரைப்படத்தில் புகழ்பெற்ற நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த படத்தின் கதைக்களமானது ஒரு லட்சியமிக்க போலீஸ்காரரான சத்யாவை (அதர்வா) சுற்றி வருகிறது. காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் போலீஸ்காரரான அவர் அங்கு வரும் அவசர தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கிறார். இந்த நிலையில் கடத்தப்பட்ட பெண்ணிடம் இருந்து சத்யாவுக்கு ஒரு போன் வருகிறது. இறந்துவிட்டதாக கருதப்பட்ட அந்த பெண்ணிடம் இருந்து போன் வந்ததால், அது எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் சத்யா குற்றவாளியை பிடித்து அந்த பெண்ணை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மீதிக் கதையாகும். 

இது மட்டும் இன்றி மகிழ்ச்சியை மேலும் ஒரு படி உயர்த்தும் வகையில்,  நக்கலும் நையாண்டியும் நிறைந்த அதன் பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியான கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 – இல் இந்த வார சிறப்பு விருந்தினராக நடிகரும் இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி பங்கேற்க இருக்கிறார். மன்னர் ஜல்சா மற்றும் அவரது தீவுவாசிகளுடன் இவரது நகைச்சுவை நிறைந்த உரையாடல்  உங்களை நிச்சயம் சிரிக்க வைக்கும். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் அமுதவாணனும் இந்த நிகழ்ச்சியில் தோன்றி உங்களை மேலும் சிரிக்க வைக்க இருக்கிறார். இது செப்டம்பர் 19-ந்தேதி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

அன்றைய தினம் நண்பகல் 12 மணியில் இருந்து இடைவிடாத பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வழங்க இருப்பதால், உற்சாகமிகுந்த வார இறுதிக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை மறவாமல் டியூன் செய்யுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். தங்களது சௌகரியத்திற்கேற்றவாறு எந்த நேரத்திலும் கலர்ஸ் தமிழின் நிகழ்ச்சிகளைக் கண்டுமகிழ VOOT – ஐ பார்வையாளர்கள் டியூன் செய்யலாம்.

 

 

கலர்ஸ் தமிழ் குறித்து: 2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ், வயாகாம்18 குடும்பத்திலிருந்து வெளிவந்திருக்கின்ற புதிய, குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும். பெண்களையும் மற்றும் அவர்களது குடும்பங்களையும் கொண்டாடுகிற, உத்வேகமளிக்கிற, உணர முற்படுகிற தனித்துவமான, வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும். 'இது நம்ம ஊரு கலரு” என்ற விருதுவாக்குடன் களமிறங்கியிருக்கிற கலர்ஸ் தமிழ், கதை சொல்வது மீது முதன்மையான கவனத்தை செலுத்தும் தரமான, புதுமையான நிகழ்ச்சி அமைப்புகளின் வழியாக சிறப்பான பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இதன் நிகழ்வுகள் இருக்கும். வேலுநாட்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் மற்றும் ஒரு கதை பாடட்டுமா என்பவை எங்களது சேனலில் ஒளிபரப்பான பிரபல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளாகும்.  வேலு நாச்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, டான்ஸ் Vs டான்ஸ், கலர்ஸ் காமெடி நைட்ஸ், ஓவியா, சிவகாமி, வந்தாள் ஸ்ரீதேவி, பேரழகி மற்றும் திருமணம், தறி மற்றும் மலர் போன்ற சமூக – குடும்ப நெடுந்தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிற, ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சிகளுள் சிலவாகும்.

 

வயாகாம்18 குறித்து: வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட்., இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் என்டர்டெயின்மென்ட் வலையமைப்புகளுள் ஒன்றாகும். பல செயல்தளங்களில் பல தலைமுறைகளுக்கான பல கலாச்சார பிராண்டு அனுபவங்களை வழங்கி வருகிற வலுவான பிராண்டுகளின் தாயகமாக இது திகழ்கிறது. 51% பங்குகளை கொண்டிருக்கும் டிவி18 மற்றும் 49% பங்குகளை கொண்டிருக்கும் வயாகாம்18 ஆகிய இரு பெருநிறுவனங்களின் கூட்டுமுயற்சி நிறுவனமான வயாகாம்18, சினிமா வழியாகவும் மற்றும் ஆன்லைன், வானொலி மற்றும் களஅளவில் கொண்டிருக்கும் தனது ஆதாரவளங்களின் மூலமாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைவதன் மூலம் இந்தியாவின் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கை வரையறை செய்கிறது.