கோயம்பேடு மார்க்கெட் 5 மாதங்களுக்கு பிறகு திறப்பு வியாபாரிகள் மகிழ்ச்சி
கோயம்பேடு மார்க்கெட் 5 மாதங்களுக்கு பிறகு திறப்பு வியாபாரிகள் மகிழ்ச்சி
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக, திருமழிசையில் இயங்கி வந்த 194 கடைகள், கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று திறக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் மொத்த வியாபாரகடைகள் 600 சதுர அடியிலிருந்து 1200 சதுர அடி உள்ள கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டது. மேலும் காய்கறி மார்க்கெட் திருமழிசை பகுதிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு அப்பகுதியில் இயங்கி வந்தது.
தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய தளர்வு அளிக்கப்பட்டதை அடுத்து இயல்பு நிலைக்கு திரும்பின. இதனையடுத்து காய்கறி மொத்த வியாபாரிகள் மீண்டும் கோயம் பேடு சந்தைதிறக்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கோயம் பேடு காய்கறி மார்க்கெட் திறக்க அரசு அனுமதி வழங்கியது. மேலும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதனையடுத்து முதற்கட்டமாக 194 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. மார்க்கெட் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. சரக்குவாகனங்களுக்கு இரவு 9 முதல் காலை 5 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.