சென்னை போலீசில் 120 ஏட்டுகளுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு- கமிஷனர் உத்தரவு

சென்னை காவல்துறையில் காவலர்களாக வேலையில் சேர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றி, அதில் 10 ஆண்டுகள் ஏட்டுகளாக, எந்த வித தண்டனையிலும் சிக்காமல் சிறப்பாக பணியாற்றினால் அவர்களுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்க போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.
அந்த வகையில் பணியாற்றிய 120 ஏட்டுகள் சென்னை காவல்துறையில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கி, சென்னை தலைமையக இணை கமிஷனர் மல்லிகா நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
பதவி உயர்வு பெற்ற இந்த 120 ஏட்டுகளும் தற்போது பணியில் இருக்கும் அதே போலீஸ் நிலையத்தில் தொடர்ந்து பணியாற்றவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இனிமேல் அவர்கள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக அதிகாரிகள் அந்தஸ்தில் பணியாற்றுவார்கள்.