எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் இரண்டு மாணவர்கள் மனச்சோர்வின் காரணமாக மரணம்

எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் இரண்டு மாணவர்கள் மனச்சோர்வின் காரணமாக மரணம்

இரு துரதிஷ்டவசமான சம்பவங்கள் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் நடைபெற்றுள்ளது. இரண்டு மாணவர்கள் மனச்சோர்வின் காரணமாக தங்கள் உயிரை நீத்துள்ளனர். எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் உள்ள மனநலத்துறை மாணவர்களுக்குப் போதுமான ஆதரவும் நம்பிக்கையும் தகுந்த ஆலோசனையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. எஸ்.ஆர்.எம். வளாகத்திலேயே செயல்பட்டு வரும் மாணவர்களுக்கான ஆலோசனை மையம் தகுந்த வகையில் மாணவர்களை வழிநடத்தி வருகிறது. அது மட்டுமல்லாது இணைய வழி மாணவர்களுக்கான ஆலோசனை மையம் 24/7  மணிநேரமும் செயல்பட்டு இங்குள்ள ஒவ்வொரு மாணவரையும் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அனைத்து வகையிலும் மனநல உதவிபெற ஏற்பாடு செய்திருந்தும் இறுதி ஆண்டு மாணவி ஒருவர் தன் சொந்த வாழ்க்கை பிரச்சினை காரணமாக தன் உயிரை நீத்துள்ளார். அதே போல் இன்னொரு மாணவர் முதல் பருவத்தில் 7 பாடங்களிலும் இரண்டாம் பருவத்தில் 4 பாடங்களிலும் தோல்வியடைந்து இருந்ததால் விடுதியில் நண்பர்கள் துணையின்றி தனியே இருந்து தேர்வு எழுதுவது குறித்த கவலையிலும் மனச்சோர்விலும் தன் உயிரை நீத்துக் கொண்டார்.

மாணவர்கள் நலனில் பல்கலைக்கழகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவர்கள் வாழ்வில் என்ன நடைபெறுகிறது என்பதை கவனத்தில் கொண்டு ஆசிரியர்களிடம் அவ்வப்போது அவர்களின் செயல்திறனைக் கேட்டறிந்து இது போன்ற செயல்களிலிருந்து மீட்டெடுக்க உறுதுணையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். - பேராசிரியர் ந. சேதுராமன், பதிவாளர், எஸ்.ஆர்.எம். கல்விநிறுவனம்