அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ்

அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ்

அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ், இண்டர் - வென்ஷனல் நெஃப்ராலஜியில் முன்னோடியாகி இருக்கிறது!

     இண்டர்வென்ஷனல் நெஃப்ராலஜி, டயாலிசிஸ் ஃபிஸ்டுலா பிரச்னைகளில் இருந்து காப்பாற்றும் மருத்துவமாக வளர்ச்சிக் கண்டிருக்கிறது.

    ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மக்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற பன்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளான அப்பல்லோ குழுமத்தின் ஒரு அங்கமான அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ் ஒ.எம்.ஆர், டயாலிசிஸ் ஃபிஸ்டுலா [dialysis fistulae] தொடர்பான பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்கும் இண்டர்வென்ஷனல் நெஃப்ராலஜியில் [Interventional Nephrology] முன்னோடியாகி இருக்கிறது. தமிழ்நாட்டின் முதல் இண்டர்வென்ஷனல் நெஃப்ராலஜிஸ்ட்டான டாக்டர். வெங்கடேஷ் ராஜ்குமார் தனது சிறப்பு மருத்துவர்கள் குழுவுடன் இணைந்து, பெரிஃபெரல் ஆஞ்சியோப்ளாஸ்டி [peripheral angioplasty] [இதயத்திற்கு செய்யப்படும் ஆஞ்சியோப்ளாஸ்டியைப் போன்றது],  ஸ்டெண்டிங் [stenting], பலூன் ஆஞ்சியோப்ளாஸ்டி [balloon angioplasty], காய்லிங் [coiling],, க்ளூ இன்ஜெக்ஷன் [glue injection], த்ரோம்பெக்டோமிஸ் [Thrombectomies] போன்ற பல்வேறு மருத்துவ நடைமுறைகளின் மூலம் சிக்கலான ஃபிஸ்டுலாகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றிருக்கிறார். இந்த மருத்துவ குழு, கடந்த இரண்டு வருடங்களில்  இண்டர்வென்ஷனல் நெஃப்ராலஜி மருத்துவ நுட்பங்கள் மூலம் 130-க்கும் அதிகமான சிக்கலான பிஸ்டுலாக்களுக்கு சிகிச்சையளித்திருக்கிறது.
    உலகளவில், இன்று சிறுநீரக செயலிழப்புக்கு நீரழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய இரண்டும் மிக முக்கியமான காரணங்களாகி இருக்கின்றன. மேலும் இதனால் முற்றிய சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளின் எண்ணிக்கையும் மிகவேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒரு மில்லியன் மக்களுக்கு 200 முதல் 230 பேர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சிறுநீரக செயலிழப்பு இறுதிநிலையை எட்டிய நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அல்லது நீண்ட கால டயாலிசிஸ் தேவைப்படுகிறது. உறுப்புகளின் செயல்பாடு மிகவும் குறைவாக இருப்பதால், டயாலிசிஸ் என்பது அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவ நடைமுறையாகும். டயாலிசிஸ் என்பது ரத்தத்தை டயாலைசர் மூலம் வடிகட்டும் ஒரு மருத்துவநடைமுறை. இம்முறையில் இரத்தம் வடிகட்டி வழியாக பாய்வதன் மூலம் அதிலிருக்கும் திரவம் அகற்றப்பட்டுகிறது. இதற்கு பின்பு இரத்தம் மீண்டும் நம் உடலுக்குத் திரும்பும். இரத்த நாளங்களை அடைய ரத்த ஓட்டம் பெற வழி  அவசியம். நீண்ட கால டயாலிசிஸில் ரத்த ஓட்டத்திற்கான வழி அர்டெரியோவெனஸ் [arteriovenous - (AV)] பிஸ்டுலா மூலம் உருவாக்கப்படுகிறது. இது ஒரு பெரிய இரத்த நாளத்தை உருவாக்க தோலின் கீழிருக்கும் ஒரு நரம்புடன் தமனி இணைகிறது. ஃபிஸ்டுலாக்கள் தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும் சிகிச்சையளிப்பதில் இண்டர்வென்ஷனல் நெப்ராலஜி   மருத்துவ தொழில்நுட்பங்கள் எளிமையாகி இருக்கின்றன.
    கருத்தரங்கில் பேசிய ஒ.எம்.ஆர்.-ல் செயல்பட்டுவரும் அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸின்  இண்டர்வென்ஷனல் நெஃப்ராலஜிஸ்ட் டாக்டர். வெங்கடேஷ் ராஜ்குமார் [Dr.Venkatesh 

Rajkumar, Interventional Nephrologist, Apollo Speciality Hospitals, OMR], ‘’ “நோயாளியின் வாழ்க்கைத் தரம் மற்றும் நீண்ட ஆயுளானது அவர்கள்  பெறும் டயாலிசிஸின் தரத்திற்கு ஏற்றது போல அதிகரிக்கிறது. டயாலிசிஸுக்கு நோயாளியின் உடலில் இருந்து நிமிடத்திற்கு 300 மில்லி லிட்டர் என்ற விகிதத்தில் இரத்தம் எடுக்கப்பட வேண்டும்; ஒரு சாதாரண இரத்த நாளத்தினால் அத்தகைய உயர் இரத்த ஓட்டத்திற்கு ஏற்ப தாக்குப்பிடிக்க முடியாது.. இதனால், உயர் ரத்த ஓட்டத்திற்கு உதவும் வகையில், பெரிய மற்றும் அதிக தடிமன் உள்ள ரத்த நாளம் ஒன்றை உருவாக்க இரண்டு இரத்த நாளங்களை ஒன்றிணைத்து ஏ.வி ஃபிஸ்டுலா என்று அழைக்கப்படும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் அதிக ஆற்றல் கொண்ட ரத்த நாளத்தை உருவாக்குகிறோம்.  சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், டயாலிசிஸின் தரமானது,  அந்த ஏ.வி.எஃப்-ன் தரம் மற்றும் ரத்த ஓட்டத்திற்கு எந்தளவுக்கு உதவுகிறது என்பதை பொறுத்தே அமையும்’’ என்றார்.
     "டயாலிசிஸை மேற்கொள்ள உதவும்வகையில் ஃபிஸ்டுலா முதிர்ச்சியடையும் போது,  சிறப்பான சூழ்நிலைகளிலும் கூட 50-60% மட்டுமே வாய்ப்பு இருக்கிறது. மேலும், டயாலிசிஸ் தவறாமல் தொடர்ந்து செய்ய வேண்டியிருப்பதால் (3 / வாரம்) நீண்ட காலம் தொடரும்போது  ஃபிஸ்டுலாவில் பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால், மெல்லிய இரத்த நாளங்களைக் கொண்ட இந்திய நோயாளிகளுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதால், நன்கு செயல்படும் ஃபிஸ்டுலாவை உருவாக்குவது கடினமான ஒன்றாகும். ஆனால் அதே நேரம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக டயாலிசிஸில் இருக்கும், நீண்ட காலமாக நீரிழிவு நோயை சமாளித்துவரும் நோயாளிகளையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். ஃபிஸ்டுலா தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்து இருக்கும் நோயாளிகளுக்கு மருந்து வெளியிடும் பலூன்கள் [drug releasing balloons] போன்ற சிறப்பு நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஓ.எம்.ஆர்-ல் செயல்பட்டுவரும் அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ் மட்டுமே,  தமிழ்நாட்டில் இத்தகைய ஃபிஸ்டுலா தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளித்து வரும் ஒரே மையமாகும். இந்த மருத்துவ நடைமுறைகள் அனைத்தையும் செய்வதன் மூலம் குறிப்பிட்ட நோயாளிகளுக்கு ஃபிஸ்டுலா நீண்ட காலம் நீடிக்கும் என்பதையும், அது நன்றாக செயல்படுவதையும் மட்டுமின்றி டயாலிசிஸ் நோயாளிகளின் வாழ்க்கைத் தரம் நன்றாக இருப்பதையும் நாங்கள் உறுதிப்படுத்த முயற்சிக்கிறோம்.” என்று ஒ.எம்.ஆர்.-ல் செயல்பட்டுவரும் அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸின்  இண்டர்வென்ஷனல் நெஃப்ராலஜிஸ்ட் டாக்டர். வெங்கடேஷ் ராஜ்குமார் மேலும் கூறினார்.
    சிறப்பு  நிபுணத்துவம் பெற்ற இந்த மருத்துவர் குழு, ஃபிஸ்டுலா நல்லமுறையில் செயல்பட வைப்பதில்,  டாப்ளர் [Doppler], அர்டெரியோக்ராஃபி [Arteriography], பெரிஃபெரல் மற்றும் சென்ட்ரல் வெனோக்ராஃபி [Peripheral & Central Venography]  போன்ற மருத்துவ நடைமுறைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருக்கிறது.