தெய்வீக இசையுடன் உங்களை மகிழ்விக்க வருகிறது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் ‘பஜன் சாம்ராட்’

தெய்வீக இசையுடன் உங்களை மகிழ்விக்க வருகிறது
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் ‘பஜன் சாம்ராட்’

-கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் 
ஜனவரி 28 முதல் 31 வரை இசை கொண்டாட்டங்களை பார்த்து ரசியுங்கள்
 
சென்னை, ஜன. 28- இசை கலைஞர்களுக்காக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தனித்துவமான ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியானது தமிழகத்தின் சிறந்த பஜனை பாடகர்களை கண்டறிந்து அவர்களுக்கு மகுடம் சூட்டி மகிழ்விக்கும் விதமாக ‘பஜன் சாம்ராட்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில் மகிழ்ச்சியான காலைவேளை பஜனைகள் மற்றும் சுவாரஸ்யமான இசை ஆகியவை பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 24 அணிகளில், 12 அணிகள் அடுத்த சுற்றுக்கு தேர்வாகியுள்ளன. இந்த அணிகள் தெய்வீக பாடல்களை பாட உள்ளன. இந்த அணிகள் 3வது சுற்றுக்குள் யார் நுழைவது என்பதற்காக கடுமையாக போராட இருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்கள், மொத்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து அதிலிருந்து அவர்களின் கருத்துகளை தெரிவிக்க இருக்கிறார்கள். எனவே கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்து பக்தி மணம் கமழும் இசையை பார்த்து ரசியுங்கள்.
இந்த இசை நிகழ்ச்சியை நீங்கள் பார்க்க வேண்டியதற்கான 3 முக்கிய காரணங்கள்,
 
மகிழ்ச்சியூட்டும் மந்திரங்கள்: இந்த நிகழ்ச்சியில் தங்கள் குருவிடம் கற்றுக் கொண்ட இசை மற்றும் பாடல்களை இந்த அணிகள் திறம்பட வெளிக்காட்ட உள்ளன. இதில் அவர்கள் பாரம்பரியமிக்க கர்னாடக இசை நிகழ்ச்சியை வழங்கவிருக்கிறார்கள். இதில் பல்வேறு மொழிகளில் தசா கீர்த்தி முதல் தெய்வீக ராகம் வரை அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு சுற்றுகள் இடம் பெற்றுள்ளன. அடுத்த நிலைக்கு யார் செல்வது என்பதற்காக இந்த அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவும். எனவே பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள், உங்களுக்கு பிடித்தமான அணிகளுக்கு உங்களின் ஆதரவை வழங்குங்கள்.
 
கர்னாடக இசை மேஸ்ட்ரோ: இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல கர்னாடக இசைக் கலைஞர்கள் ஆர். கணேஷ் மற்றும் மகதி ஆகியோர் உள்ளனர். இவர்கள் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி நிகழ்ச்சியை மிகவும் விறுவிறுப்பாக கொண்டு செல்ல இருக்கிறார்கள். திறமையான பாடகர்களின் சிறப்பான தெய்வீக மணம் கமழும் பாடல்களால் இந்த நிகழ்ச்சி பல்துறை திறமைகளின் மிகப்பெரிய உச்சக்கட்டமாக இருக்கும்.  
 
இசை நட்சத்திரம்: பஜன் சாம்ராட் இசை நிகழ்ச்சியை தொகுப்பாளர் வி.ஜெ. பிரியதர்ஷினி தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் இந்த வார சிறப்பு நடுவர்களாக புகழ்பெற்ற கர்னாடக இசை மேதைகள் வினயா கார்த்திக், சாந்தி சுரேஷ் மற்றும் சிந்துஜா சந்திரமவுலி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த சிறப்பு நடுவர்கள் போட்டியாளர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு வழிமுறைகளை சொல்ல இருக்கிறார்கள். மேலும் தங்கள் வாழ்க்கையில் இசை தொடர்பாக தங்களுக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.
 
எனவே கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள். ஜனவரி 28 முதல் 31 வரை தெய்வீக மணம் கமழும் இசை நிகழ்ச்சியை பார்த்து ரசியுங்கள்.