புற்றுநோய் சிகிச்சையில் இதுவரையில்லாத ஒரு புதிய மைல்கல்லை எட்டிய அப்பல்லோ மருத்துவமனை

புற்றுநோய் சிகிச்சையில் இதுவரையில்லாத ஒரு புதிய மைல்கல்லை எட்டிய அப்பல்லோ மருத்துவமனை

சென்னை – இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சையில் இதுவரையில்லாத ஒரு முதல் மைல்கல்லாக, சென்னையைச் சேர்ந்த அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர்  சென்டரில் [Apollo Proton Cancer Center (APCC)],  எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை [Bone Marrow Transplant] எளிதாக்கும் வகையில் அதற்கு முன்பாக மேற்கொள்ளப்படும்  ‘முழுமையான  மஜ்ஜை கதிரியக்க சிகிச்சையை [Total Marrow Irradiation (TMI)]  வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் துணைத்தலைவர் திருமதி. ப்ரீத்தா ரெட்டி [Ms. Preetha Reddy, Vice Chairperson, Apollo Hospitals Group] கூறுகையில், ‘’அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர் சென்டரில் அளிக்கப்படும் அதிநவீன ப்ரோட்டான் தெரபி, புற்றுநோய் மேலாண்மையில் ஒரு புதிய தொடக்கத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ப்ரோட்டான் கேன்சர் சென்டர் ஆரம்பித்த சில மாதங்களிலேயே, இந்தியாவிலேயே முதல் முறையாக  டோட்டல் மேரோ இர்ரேடியஷன்  சிகிச்சையை இருவருக்கு வெற்றிகரமாக அளித்து ஒரு புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது.  இந்த மாபெரும் சாதனையானது, அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர் சென்டரில் (ஏ.பி.சி.சி) நாங்கள் மேற்கொண்டிருக்கும் முதலீட்டை அர்த்தம் உள்ளதாக்கி இருக்கிறது. இன்று இந்தியாவிலேயே மிகச்சிறந்த, அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தை எங்களால்  கொண்டுவர முடிந்திருக்கிறது.  இனிவரும் காலங்களில் ஏ.பி.சி.சி இன்னும் பல மைல்கல்களை எட்டும். புதிய சாதனைகளைப் படைக்கும். புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவில் இருக்கும் புற்றுநோயாளிகளுக்கும் மட்டுமில்லாமல், தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும்  தனது மருத்துவ சிகிச்சைகளை வழங்கும்’’ என்றார்..

தென்கிழக்கு ஆசியாவின் முதல் ப்ரோட்டான் தெரபி சென்டரில், ஒமன் நாட்டைச் சேர்ந்த 35 வயதான் நர்சுக்கு இந்த மருத்துவ நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.  இவருக்கு ப்னோடைபிக் அக்யூட் லியூககேமியா உடனான க்ரானிக் மைலாய்ட் லுயூகேமியா [Chronic Myeloid Leukaemia with mixed phenotypic Acute Leukaemia]  இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.  இவரது மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு, அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், மண்ணீரல் மற்றும் மூளையில் மருந்துகளில் இருந்து தப்பிக்கும் புற்றுநோய் செல்கள் இருக்கும்  பகுதியில் கதிர்வீச்சுடன் கூடிய டிஎம்ஐ சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.

இதனால் இந்நோயாளிக்கு இரண்டு நாட்கள் ஹீமோதெரபி  கொடுக்கப்பட்ட பிறகு, அவருக்கு அவசியமான மருத்துவ நடைமுறைகள், ஏப்ரல் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ந்து பெரிஃபெரல் ப்ளட் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை [peripheral blood stem cell transplantation]  ஏப்ரல் 23-ம் தேதி மேற்கொள்ளப்பட்டது.

35 வயதான நோயாளி, பல விரிவான மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு கடந்த மாதம் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   கீமோ மற்றும் ஃபெரிஃபெரல் ப்ளட் ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சையை தொடர்ந்து அவருக்கும் டிஎம்ஐ மருத்துவ நடைமுறையை மேற்கொள்ள நாங்கள் முடிவு செய்தோம். இதற்காக ரத்தத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்ட ஃபெரிஃபெரல் ப்ளட் ஸ்டெம் செல், அவரது சகோதரரிடமிருந்து தானமாகப் பெறப்பட்டது.  நோயாளிக்குப் பொருந்துகிற நன்கொடையாளராக அவரது சகோதரர் இருந்தமையால் அவரிடமிருந்து  சிகிச்சைகாக  பெறப்பட்டது. இந்த சிகிச்சைக்கு நோயாளியிடமிருந்து நல்ல பலன் தெரிந்தது. மருத்துவமனையில் இருந்து  டிஸ்சார்ஜ் ஆவதற்கு அவர் மிக விரைவாக தயாராகி வருகிறார்’’ என்றார் டாக்டர். ஜோஸ் எம் இசாவ்.

ஒட்டுமொத்த உடல் கதிரியக்க சிகிச்சையை விட,  முழுமையான கதிரியக்க சிகிச்சையானது அதிக பலனளிக்கிறது. காரணம் எலும்பு மஜ்ஜை சிகிச்சையில் இந்த முழுமையான கதிரியக்க சிகிச்சையானது, எலும்பு மஜ்ஜை பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும், முழு கதிர்வீச்சுடன், துல்லியமாக சிகிச்சையளிக்க உதவுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சுற்றி இருக்கும், கண்கள், தைராய்ட், இதயம், நுரையீரல்கள், சிறுநீரங்கங்கள், கருப்பை, சிறுகுடல் மற்றும் பெருங்குடல் உள்ளிட்ட இதர உடலுறுப்புகளை பாதிக்காமலும், கதிரியக்கத்தினால் உண்டாகும் நீண்ட கால பக்கவிளைவுகளை வெகுவாக குறைக்கும் வகையிலும் சிகிச்சையளிக்க முடியும் என்பது இச்சிகிச்சையின் சிறப்பம்சமாகும்’’ என்கிறார் டாக்டர். ஸ்ரீநிவாஸ் சில்லுக்குரி.

சில வகை புற்றுநோய்கள், லுயூக்கேமியா, லிம்பொமாஸ், மைலோமா [leukaemia, lymphomas and multiple myeloma] உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிஎம்டி சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இந்த மாற்று சிகிச்சைக்கு முன்பாக  கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு அளிக்கப்படும்.  மஜ்ஜையில் இருக்கும் புற்றுநோயை சமநிலைப்படுத்த இவை அளிக்கப்படுகின்றன. எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை முன்பாக, பாதிக்கப்பட்ட பகுதியை நிலைப்படுத்தும் விதமாக ‘டோட்டல் பாடி இரிரேடியேஷன்’ [Total Body Irradiation (TBI)] அளிக்கப்படுவது வழக்கம். இந்த மருத்துவ நடைமுறையின்படி,  தேவைப்பட்டால், முழு உடலுக்கும் கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும்.

எலும்பு மஜ்ஜை பாதிக்கப்பட்ட பகுதியை கதிரியக்க சிகிச்சைக்கு உட்படுத்துவது  [ரத்த செல்களை உருவாக்கும் சைட்], திசுக்கள் தொடர்புள்ள லிம்பாய்ட் உறுப்புகளை [lymphoid organs]  மட்டும் கதிர் வீச்சு சிகிச்சைக்கு உட்படுத்தினாலே போது, எதிர்மறையான விளைவுகள் உண்டாக்குகின்றன என பல்வேறு ஆய்வு அறிவிக்கைகள் தெரிவிக்கின்றன.

‘’இந்த நோயாளியைப் பொறுத்தவரை, எலும்பு மஜ்ஜைக்கு போதுமான அளவு கதிர்வீச்சு சிகிச்சை கொடுப்பது எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. மேலும் நுரையீரல், இதயம், வயிறு, சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் மற்றும் வாய் போன்ற உடலுறுப்புகளைப் பாதுகாப்பதும் சவாலாக இருந்தது. நவீன ரேடியேஷன் தொழில்நுட்பம் மூலம், டோட்டல் மேரோ இர்ரேடியேஷன் தற்போது சாத்தியமாகி இருக்கிறது. மேலும் பாதிப்பில்லாத இதர உடலுறுப்புகளை கதிரியக்கத்தில் இருந்து காப்பாற்ற முடிவதோடு, பாதிப்புகளைக் குறைக்கவும், உயிர் மீளும் வாய்ப்புகளை அதிகரிக்கவும் முடிந்திருக்கிறது.  இது எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையில் உயிர் மீள் சதவீத்த்தை வெகுவாக அதிகரித்து இருக்கிறது’’ என்றார் சீனியர் கன்சல்டண்ட் –ரேடியேஷன் ஆன்காலஜி, டாக்டர் சில்லுகுரி. [Dr. Srinivas Chilukuri – Senior Consultant Radiation Oncology]

’’’டோட்டல் மேரோ இர்ரேடியேஷன்’ எனப்படும் டிஎம்ஐ மருத்துவ நடைமுறையானது, அதிக நேரம் மற்றும் பெரும் முயற்சி தேவைப்படும் ஒன்றாகும். அதேநேரம் நோயாளிகளுக்கு நம்பிக்கையளிக்கும், பெரிய பக்கவிளைவுகள் இல்லாத சிறப்பான வாழ்வை அளிக்கும் மருத்துவ நடைமுறையாகவும் கைக்கொடுக்கிறது.’’ என்றார் டாக்டர். ஜோஸ் எம் இசாவ்

ஒமன் நாட்டைச் சேர்ந்த நோயாளியுடன், சென்னை அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர் சென்டரை சேர்ந்த மருத்துவர்கள் பெரும் அபாயத்தில் இருந்த 24 வயதான, அக்யூட் லிம்போப்ளாஸ்டிக் லியூகேமியாவினால்  [Acute Lymphoblastic Leukemia பாதிக்கப்பட்ட நோயாளிக்கும் சிகிச்சையளித்து இருக்கிறார்கள்.  ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரையில், இந்நோயாளிக்கு டோட்டல் லிம்பாய்ட் இர்ரேடியேஷன் உடன் டோட்டல் மேரோ இர்ரேடியேஷன் சிகிச்சை [Total Marrow irradiation with Total Lymphoid Irradiation] அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்னும் ஒருவாரத்தில் அவர் மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.