22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு

22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு
22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு

1997-98 ம் ஆண்டிற்கு பிறகு வாகன விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கடுமையான சரிவை சந்தித்திருப்பதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) தெரிவித்துள்ளது.SIAM இன்று (செப்.,09) ஆகஸ்ட் மாத வாகன விற்பனை குறித்த புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது.

இதில், 2018 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பயணிகள் கார் விற்பனை 41.1 சதவீதம் சரிந்துள்ளது. 1.15 லட்சம் கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. இருசக்கர வாகன விற்பனை 22.2 சதவீதம் சரிந்து 15.1 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.

சரக்கு வாகன விற்பனை 38.7 சதவீதம் சரிந்து 51,897 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வாகன விற்பனை 31.6 சதவீதம் சரிந்து 1.96 லட்சமாக உள்ளது. வாகன ஏற்றுமதியும் ஆகஸ்ட் மாதத்தில் 2.4 சதவீதம் சரிந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 4.2 லட்சம் வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.