உடல் வலிமை பெற அணிலை சாப்பிட்ட தம்பதி பரிதாப சாவு!

உடல் வலிமை பெற அணிலை சாப்பிட்ட தம்பதி பரிதாப சாவு!

உள்ளான்பத்தர்: மங்கோலியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, அணிலை சமைக்காமல் பச்சையாக உண்டால் உடல் வலிமை பெறும் என்ற நம்பிக்கையில் மர்மூத் எனும் ஒரு வகை அணிலை பிடித்து சமைக்காமல் அதன் கிட்னி, வயிற்றுப்பகுதி, பித்தப்பை ஆகியவற்றை உண்டனர்.  

இதையடுத்து அவர்களுக்கு உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்லும்போது இருவருக்கும் பிளேக் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. 

அதன் பின்னர் இரண்டு தினங்களில் அந்த நபர் இறந்து விட்டார். அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த மே 1 அன்று அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.