உள்ளாட்சி தேர்தல் பற்றிய புதிய அறிவிப்பு!

உள்ளாட்சி தேர்தல் பற்றிய புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பாணையை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையில் இடஒதுக்கீட்டை மேற்கொள்ளாத மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக திமுக, மதிமுக உட்பட 5 கட்சிகள் மற்றும் வாக்காளர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்குகள் அனைத்தையும் இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது.