என் ஷூவை காணோம் சார்! போலீசிடம் புகார் அளித்த சென்னை நபர்!

என் ஷூவை காணோம் சார்! போலீசிடம் புகார் அளித்த சென்னை நபர்!

சென்னையில் தனது ஷூ காணாமல் போனதாக ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் அங்குள்ள காவல் நிலையத்தில் தனது ஷீ காணாமல் போய்விட்டதாக புகார் அளித்துள்ளார். ஷூ காணாமல் போனது ஒரு புகாரா? என தோன்றலாம். அந்த ஷூவின் விலை 76 ஆயிரம் ரூபாயாம்!

புகார் அளித்த அந்த நபர் இதற்கு முன்னால் இதுபோல் 10 செட் ஷூக்கள் காணாமல் போயுள்ளதாகவும், அதனால் போலீஸார் இதற்கு நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் தனது அறைக்கு பக்கத்து அறையில் சில வாலிபர்கள் தங்கியிருப்பதாகவும், அவர்கள் மேல் சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.