மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு?

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு?

டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான மயங்க் அகர்வாலுக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

துணை கேப்டனாக உள்ள ரோஹித் சர்மா, நியூஸிலாந்தில் நடைபெற உள்ள 5 டி 20 ஆட்டங் கள், 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அணியின் திட்டங்களில் முக்கிய அங்கமாக இருப்பார் என்பது குறிப் பிடத்தக்கது. தற்போதைய சூழலில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில் மேற்கிந்தியத் தீவு களுக்கு எதிரான ஒருநாள் கிரிக் கெட் போட்டித் தொடரில் தேர்வுக் குழுவினரின் விருப்பமான தேர் வாக மயங்க் அகர்வால் இருக்கக் கூடும்.