சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி

அகமதாபாத்: இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர், சர்தார் வல்லபாய் படேல். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரான படேல், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 550-க்கும் மேற்பட்ட குறுநில அரசுகளை இந்தியாவுடன் இணைத்தார். .

படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே உயரமான சிலை ஆகும். அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இரண்டு மடங்கு உயரம் கொண்டது. இந்த சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. படேலின் 144-வது பிறந்த தினமான இன்று, பிரதமர் மோடி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.