ஷாகிப் அல் ஹசன் இல்லாதது பெரிய இழப்பு : முஷ்பிகுர் ரஹிம் ட்விட்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 3-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக மக்முதுல்லா ரியாத் தலைமையிலான 15 பேர் கொண்ட வங்காளதேச அணி வீரர்கள் நேற்று டெல்லி வந்தடைந்தனர்.
இந்நிலையில் வங்கதேச அணியின் மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹிம் தனது டுவிட்டர் பதிவில் 'ஷகிப் அல்-ஹசனை தவற விடுவது நிச்சயம் இழப்பு தான். அவரும், நானும் நீண்ட காலம் இணைந்து விளையாடி இருக்கிறோம். அவர் இல்லாத களத்தில் நான் எப்படி விளையாடப்போகிறேன் என்பதை நினைத்து பார்ப்பது கூட வேதனையாக இருக்கிறது. விரைவில் சாம்பியன் வீரராக திரும்பி வருவார் என்று நம்புகிறேன். நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் ஆதரவும் அவருக்கு உண்டு' என்று குறிப்பிட்டுள்ளார்