சென்னையில் இன்று லேசான மழை: 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னையில் இன்று லேசான மழை: 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு
சென்னையில் இன்று லேசான மழை: 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வியாழக்கிழமை (டிச. 5) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குன்னூரில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 130 மி.மீ.மழை பதிவாகி உள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக மிதமானது முதல் கனமழை பெய்து வந்த நிலையில், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆதம்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, மெரினா, சேத்துப்பட்டு, சாந்தோம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் புதன்கிழமை அதிகாலை லேசான மழை பதிவானது.

இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.