இந்தியா தனது 2 போர் கப்பல்களை ஈரானுக்கு அனுப்பியுள்ளது

இந்தியா தனது 2 போர் கப்பல்களை ஈரானுக்கு அனுப்பியுள்ளது

ஈரான் அமெரிக்கா இடையேயான மோதல்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ளன, ஈரான் ராணுவ தளபதி ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் வான் வழி தாக்குதல்களை தொடங்கியுள்ளது ஈராக்கில் உள்ள 5 அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது, இதில் 80ற்கும் அதிகமான அமெரிக்க ராணுவத்தினர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இரண்டு நாடுகளுக்கு இடையே முழுமையான போர் உண்டாகும் பட்சத்தில் அந்த நாட்டில் உள்ள மக்களுக்கும் ஆபத்து உண்டாகும் என கணக்கிடப்பட்டுள்ளது, தற்போது இந்திய கடற்படை இரண்டு போர்கப்பல்களை மேற்கு ஆசியாவிற்கு அனுப்பியுள்ளது. ஒரு கப்பல் ஒமன் வளைகுடாவிற்கும் மற்றொன்று ஏடன் வளைகுடாவிற்கும் அனுப்பப்பட்டுள்ளன.தற்போதுள்ள நிலைமையை கண்காணிக்க அனுப்பபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தூதரகம் மூலம் மீட்டு வர இந்திய போர் கப்பல்கள் வளைகுடா நாடுகளை நோக்கி பிரதமரின் உத்தரவின் பேரில் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் வளைகுடா பிராந்தியத்தில் நடக்கும் மோதல்கள் குறித்து இந்திய ராணுவம் நேரடி கண்காணிப்பை மேற்கொள்ளவும் சென்றுள்ளதாக ஒரு கருத்தும் கூறப்படுகிறது.

ஈரான் அமெரிக்கா இடையே போர் உண்டானால் அது இந்திய பொருளாதாரத்தை பாதிக்காது என்றும் கச்சா எண்ணெயை கூடுதலாக பெற ரசியாவுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டதும் அதை சென்னையிலேயே இறக்குமதி செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன, எனவே கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் அதனை சமாளிக்க இந்தியா தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.