இந்திய அணியில் ஒருவரை சேர்க்க போறோம்! - சர்ப்ரைஸ் செய்யும் கோலி!

 இந்திய அணியில் ஒருவரை சேர்க்க போறோம்! - சர்ப்ரைஸ் செய்யும் கோலி!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட இருக்கு இந்திய அணியில் சர்ப்ரைஸாக ஒரு வீரர் சேர்க்கப்பட இருப்பதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி 'வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்திய அணி மேலும் வலுவடைந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பும்ரா, ஷிகர் தவான் களம் இறங்கியுள்ளனர்.' என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து இந்தியா அணி நியூஸிலாந்து, ஆஸ்திராலிய அணிகளுடன் விளையாட இருப்பது குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி 'ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் ஒரு வீரரை சர்ப்ரைஸாக இறக்க உள்ளோம். அவர் வேகப்பந்து மற்றும் பவுன்சர்கள் வீசக்கூடியவர்' என்று கூறியுள்ளார்.