திருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச

திருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச

திருவாண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில், மிகவும் பிரசித்திப் பெற்ற கோயிலாகும். இந்த கோயிலில் இன்று காலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

ஒரு தீபத்திலிருந்து ஐந்து தீபங்கள் ஏற்றப்பட்டு, பின்னர் அந்த தீபத்திலிருந்து ஒரு தீபமாக பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை கண்டுகளிக்க 20 லட்சத்துக்கும் மேல் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.