விக்ரம் பிரபு  நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது டாணாக்காரன் திரைப்படம். 

விக்ரம் பிரபு  நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது டாணாக்காரன் திரைப்படம். 
விக்ரம் பிரபு  நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது டாணாக்காரன் திரைப்படம். 
விக்ரம் பிரபு  நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது டாணாக்காரன் திரைப்படம். 
விக்ரம் பிரபு  நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது டாணாக்காரன் திரைப்படம். 

விக்ரம் பிரபு  நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது டாணாக்காரன் திரைப்படம். 

 இயக்குநர் தமிழ் மற்றும் நடிகர் விக்ரம் பிரபு, நடிகை அஞ்சலி நாயர் மூவரிடமும் கேட்ட கேள்விகளுக்கு..

கேள்வி: இதற்கு முன்னரும் காவலாளியாக, நடித்துள்ளீர்கள் இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள். 

விக்ரம் பிரபு: 
போலீஸ் ஆவதற்கு முன்னால் என்ன செய்ய வேண்டுமோ அதை தான் செய்தேன். இந்த படத்தின் கதையை இயக்குனர் கூறும் போது, உண்மையிலயே இது போன்று நடக்குமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அவரிடம் இதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கினீர்களா என கேட்டேன். பின்னர் தான் அவரே போலீஸில் இருந்துள்ளார் என எனக்கு தெரியவந்தது. படமும் நேர்த்தியாக வந்துள்ளது. மிகவும் ஆழமாக கதையை சொல்லியுள்ளார். படத்தில் இசையமைத்த ஜிப்ரான், கலைஇயக்குனர் ராகவன், கேமராமேன் மாதேஷ் என அனைவரும் இணைந்து ஒரு சிறப்பான அணியாக செயல்பட்டனர். படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். ஒரு உலகத்தினுள் சென்று வருவது போன்ற உணர்வை உங்களுக்கு படம் கொடுக்கும்.

படம் தியேட்டரில் வெளியாகவில்லை என வருத்தம் இருக்கிறதா ?  

படம் 2019-ல் முடிக்கபட்டு மூன்று லாக்டவுனில் நாங்கள் சிக்கினோம். இந்த முடிவை எடுத்தது தயாரிப்பாளர்  எஸ்.ஆர்.பிரபு தான். அவர்  இந்த படத்துக்காக பொறுமையாக காத்திருந்தார். பின்னர் அவருக்கு இது லாபகரமானதாக இருந்தது எங்களுக்கு மகிழ்ச்சி தான். படத்தை தியேட்டரில் பார்க்க நாங்களும் விரும்பினோம், அதற்காக பல மடங்கு உழைப்பை கொடுத்துள்ளோம். ஆனால் இப்போது அதைத்தாண்டி அதிகாமான  மக்கள்  டீவியில் படத்தை பார்க்கும்படியான வாய்ப்பு உருவாகியுள்ளது. 

இப்படதிற்கு எவ்வாறு தயாரானீர்கள் ? அடுத்தடுத்த படங்கள் பற்றி ?

உடல் உழைப்பு அதிகமாக தேவைப்பட்ட ஒரு படம். போலீஸ்யாய் இருப்பதை விட, போலீஸ்யாய் ஆக போகிறவன் எப்படி இருக்க வேண்டும் என நான் தயார்படுத்தி கொண்டேன். கொஞ்சம் சவாலாக தான் படம் இருந்தது.  கேமராமேன் எல்லாவற்றை சூப்பராக பதிவு செய்துள்ளார். படத்தின் பெயருக்கான காரணம் படத்தினுள் இருக்கிறது. படத்தில் என் பெயர் அறிவு. இந்த படம் பார்த்த பின்னர் போலீஸ் மேல் மரியாதை வரும்.  இதன் பிறகு பாயும் ஒலி நீ எனக்கு, டைகர் என்ற இரு படம் உள்ளது. தியேட்டரை தாண்டி, படம் எல்லரையும் சென்றடைவது முக்கியம். அது இந்த படத்திற்கு நடப்பது மகிழ்ச்சி. ஹாட்ஸ்டாரில் படம் வெளியாகிறது. 

கேள்வி: படத்தின் நீளம்

இயக்குனர் தமிழ் : படம் 2.24 நிமிடம் 

கேள்வி: ஏன் ஓடிடி

இயக்குனர்: தமிழ் 
கொரோனா இரண்டாம் அலையின் போதே அது  தீர்மானிக்கபட்டு விட்டது .

காவல்துறை அகாடமியில் நடக்கும் சம்பவங்கள் அடங்கிய கதை.  உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கபட்டுள்ளது. 

காவல்துறை பயிற்சிக்கு செல்லும் ஒருவனுக்கும், அங்குள்ள உயர் அதிகாரி ஒருவருக்குமிடையே ஒரு அதிகார மோதல் எழுகிறது. அதனை சமாளித்து அவன் எப்படி காவல் அதிகாரி ஆகிறான் என்பதே கதை. 

இதில் ஜாதிய காரணங்கள் இல்லை, அதிகாரத்தினால் வரும் மோதல்களால் நிகழும் சம்பவங்கள்.  97- பேட்ச் நடக்கும் காவலர் பயிற்சியை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளோம்.


97-ல் காவல்துறை பெட்டாலியனில் பெண்கள் இல்லை. நான் 2002-ல் படிக்கும் போது பெண்கள் இருந்தனர். அதனால் படத்தின் ஹிரோயின் கதாபாத்திரம் வைத்தேன். ஹீரோயின் படத்தில் இன்ஸ்பெக்டர் உடைய ரைட்டராக வருகிறார். 

கேள்வி: டாணாக்காரன் என்ற பெயருக்கு காரணம்

இயக்குனர் : டாணாக்காரன் என்றால் போலீஸ்காரன்.  

கேள்வி: திருநெல்வேலியை சுற்றி சாதி இருக்கும், படத்தில் அது பிரதிபலிக்குமா

இயக்குனர்: போலீஸ்யே பெரும் அடக்குமுறை தான். சாதி இதில் இல்லை. படத்தில் போலீஸ் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி வசனங்களாக கடத்தியுள்ளோம். 

கேள்வி: படம் போலீஸ் ஆக நினைப்பவர்களுக்கு ஏதேனும் கலக்கத்தை உண்டுசெய்யுமா

இயக்குனர்: படத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை, இரு கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் கதை தான். 

கேள்வி: போலீஸ் ஆக நடிக்கிறீர்கள். இப்போது போலீஸ் கதை எடுத்துள்ளீர்கள், அதிலிருந்து எப்போது வெளியே வருவீர்கள். 

இயக்குனர்: எனக்கும் அந்த எண்ணம் உள்ளது சீக்கிரம் வெளியே வருவேன். விடுதலை படத்திலும் போலீஸாக தான் நடித்துள்ளேன். 

கேள்வி: தமிழ் சினிமாவில் போலீஸ் அகாடமி இது  தான் முதல் படம். 

இயக்குனர்: நான் கதை முடித்த பிறகு, நான் ஒரு ரெபரன்ஸ்க்காக தேடி பார்த்தேன். ஆனால் எனக்கு தெரிந்தவரை இந்தியாவில் போலீஸ் பயிற்சி பற்றி எந்த படமும் வரவில்லை.


நடிகை அஞ்சலியிடம் 

கேள்வி: நெடுநெல்வாடை படத்திற்கு  பிறகு ஏன் நடிக்கவில்லை ? 

அஞ்சலி: நெடுநெல்வாடை முடிந்த பிறகு, இந்த படத்தில் நடித்தேன், ஜெய் உடன் ஒரு படம் பண்ணியுள்ளேன். CV குமார் சாருடைய ஒரு படத்தில் நடித்துள்ளேன். நிறைய படங்கள் பண்ணுவதை விட சரியான படங்கள் செய்ய வேண்டும். இந்த படத்தில் இயக்குனர் சொன்னதை அப்படியே செய்துள்ளேன்.  

கேள்வி: கிளாமர் படங்கள் மாதிரி நடிக்க உள்ளீர்களா. 

அஞ்சலி: கிளாமர் ரோலை தாண்டி, ஒரு அர்த்தம் தர கூடிய பாத்திரத்தில் நடிக்க வேண்டும்.

டாணாக்காரன்
 
நடிப்பு​​​​​:​விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால்,
எம்.எஸ்.பாஸ்கர், பாவெல், போஸ் வெங்கட்
தயாரிப்பு​​​​:​பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் எல்.எல்.பி. 
தயாரிப்பளர்கள்: S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, P.கோபிநாத் & தங்க பிரபாகரன் .R.
இயக்குநர்​​​​:​தமிழ்
கதை, திரைக்கதை, வசனம்​:​தமிழ்
ஒளிப்பதிவு​​​​:​மாதேஷ் மாணிக்கம்
இசை​​​​​:​ஜிப்ரான்
படத்தொகுப்பு​​​:​பிளோமின் ராஜ்
கலை இயக்கம்​​​:​திருமன் ச.ராகவன்
சண்டைப்பயிற்சி​​​:​‛ஸ்டன்னர்’ சாம்
நடனம்​​​​:​ஷெரிஃப்
பாடல்கள்​​:​சந்துரு
தயாரிப்பு மேற்பார்வை​​:​சசிக்குமார், ராஜாராம்
மக்கள் தொடர்பு​​​:​ஜான்சன்