’வெப்பம் குளிர் மழை’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’வெப்பம் குளிர் மழை’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’வெப்பம் குளிர் மழை’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’வெப்பம் குளிர் மழை’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

 

மாடுகளுக்கு சினை ஊசி போடும் வேலை பார்க்கும் நாயகன் திரவுக்கும், நாயகி இஸ்மத் பானுவுக்கும் கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் உராரும், உறவினர்களும் அவர்களுடைய குழந்தையின்மை பிரச்சனையை சுட்டிக்காட்டி இஷ்ட்டத்துக்கு பேசுறாங்க. இதனால் தம்பதி மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்றாங்க. அதன்படி பரிசோதித்ததில் நாயகன் திரவுக்கு பிரச்சனை இருப்பது தெரிய வருகிறது. 

 

ஆனால், இந்த விஷயத்தை கணவரிடம் சொல்லாமல் மறைக்கும் இஸ்மத் பானு, அதே சமயம் குழந்தை இல்லாமல் கணவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து ஒரு முடிவு செய்றாங்க. அந்த முடிவால் அவங்களுக்கு ஒரு குழந்தை பிறக்குது. குழந்தை பிறந்ததால் குடும்பமே மகிழ்ச்சியில் இருக்குறாங்க. ஆனா அந்த குழந்தையாலேயே கணவன் - மனைவி இடையே பெரிய பிரச்சனை எற்படுகிறது. அந்த பிரச்சனை என்ன? என்பதையும், அதன் மூலம் மக்களுக்கு நல்ல மெசஜை சொல்வதும் தான் படத்தோட மீதிக்கதை.

 

நாயகனாக நடிச்ச திரவு முதல் படம் போல தெரியல. காரணம், முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் அமர்க்களமா நடிச்சிருக்காரு. மனைவியிடம் உள்ள காதல், ஊரார் பேச்சால் கலங்குவது, தனது தவரை நினைத்து கதறி அழுவதுன்னு ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் கொடி கட்டி பறந்திருக்கார்.

 

நாயகியா இஸ்மத் பானு, பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்திக்கே உயிர் கொடுத்து நடிச்சிருக்காங்க. அவங்களுடைய இயல்பான மற்றும் தத்ரூபமான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிச்சிடறங்கா. வசன உச்சரிப்பு, உடல் மொழி போன்றவற்றால் கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்திருக்காங்க.

 

கிராமத்து தாத்தாவா நடிச்ச எம்.எஸ்.பாஸ்கர் நல்ல பண்பட்ட நடிகர் என்பதை அழுத்தம் திருத்தமா பதிவு செய்து நடிச்சிருக்கார்.

 

நாயகன் அம்மாவா நடிச்ச ரமா, நாயகன், நாயகிக்கு இணையா நடிச்சு பேர்வாங்கியிருக்காங்க.

 

மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் அபிபுல்லா, விஜயலட்சுமி என மற்ற கதாபாத்திரங்களில் நடிச்சிவங்க புதிய முகங்கள் என்றாலும் இயல்பாக நடித்து பாராட்டு பெறுகிறார்கள்.

 

ஒளிப்பதிவு செஞ்ச பிரித்வி ராஜேந்திரன், கிராம மக்களின் வாழ்க்கையை தரூபமாக படம் பிடிச்சிருக்கார்.

 

சங்கர் இசையில் திரவின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் கிராமிய மனம் வீசும்படி அமைந்திருக்குது.

 

இந்த படத்தின் மையக்கருவே குழந்தையின்மை பிரச்சனை தான். அதை ஜனரஞ்சகமா மக்கள் ரசிக்கும் அளவுக்கு இயக்கிய பாஸ்கல் வேதமுத்துவுக்கு சென்னை பத்திரிகாவின் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.