வீரப்பனின் கஜானா - (காட்டின் காவலன்)

வீரப்பனின் கஜானா - (காட்டின் காவலன்)
வீரப்பனின் கஜானா - (காட்டின் காவலன்)
வீரப்பனின் கஜானா - (காட்டின் காவலன்)
வீரப்பனின் கஜானா - (காட்டின் காவலன்)
வீரப்பனின் கஜானா - (காட்டின் காவலன்)

வீரப்பனின் கஜானா - (காட்டின் காவலன்)

காடுகளின் பெருமையை திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படம் 'வீரப்பனின் கஜானா'
"ராட்சசி" புகழ் சை கௌதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் கதையை புதுமுக இயக்குநர் யாசின் இயக்கும் படம் 'வீரப்பனின் கஜானா'

காட்டிற்கும் மனிதனுக்கும் பிரிக்கப் முடியாத ஒரு பந்தம் இருக்கிறது. ஆதி மனிதன் காட்டில் தான் வாழ்ந்தான். பிறகு நாகரிகம் வளர்ச்சியடைந்து கிராமம், நகரம் என்று மாறியது. இருப்பினும் காட்டின் மீது அனைவருக்கும் எப்போதும் ஒரு மோகம் இருந்துக் கொண்டே இருக்கும். குறிப்பாக குழந்தைளுக்கு காடு பற்றிய ஆர்வமும் கற்பனையும் அதிகம் உண்டு. காடுகளைப் பற்றி கேட்கவும் காட்சிகளாக பார்க்கவும் உற்சாகமாகிவிடுவார்கள். அந்தக் காட்டின் பெருமையை பேன்டஸி, காமெடி, த்ரில்லர் கலந்து என்டர்டெயின்மென்டுக்கு பஞ்சம் வைக்காமல் பேசும் திரைப்படம் தான் 'வீரப்பனின் கஜானா'.

மேலும், தமிழ்நாட்டில் காடு என்றால் ஞாபகம் வருவது சத்தியமங்கலமும், வீரப்பனும் தான். ஆகையால், அதை மையமாக கொண்டு இத்திரைப்படம் உருவாகி வருகிறது. காட்டின் காவலனான வீரப்பன் சம்மந்தமானக் காட்சிகள் படத்தில் முக்கியமானதாக இருக்கும். குரங்கு, புலி, யானை என படம் முழுவதும் சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கிறது. ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் பிரபாதீஸ் ஷாம்ஸ் தயாரிக்க, ராட்சசி இயக்குனர் சை.கௌதம்ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் சேர்ந்து எழுதிய கதையை புதுமுக இயக்குநர் யாசின் இயக்குறார். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா என யூத் காம்போவுடன் உருவாவதால் இப்படம் குழந்தைகள் முதல் அனைவரும் குதூகளித்து பார்க்கக் கூடிய படமாக இருக்கும். தென்காசி, குற்றாலம், நாகர்கோவில் காட்டுப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவிருக்கிறது.
மேலும், வீரப்பனின் கஜானா திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.

 

 

#VeerappaninGhajana Movie Final Schedule going Full Swing With *ing #Rajesh #Deva @iYogiBabu  #MottaiRajendran #Pooja #Jeevitha

#FirstlookComingsoon 

Direction @MSYaseen18
Script  @sy_gowthamraj - #PrabhadishSamz
Production #FourSquaresStudios