திருவள்ளூர் மாவட்டத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்க சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள் !
திருவள்ளூர் மாவட்டத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்க சார்பாக பூந்தமல்லி ஒன்றியம்,திருமணஞ்சேரி ஜமின்கொரட்டூர்,மனவால்நகர் , திருத்தனி பள்ளிப்பட்டு,பொன்னேரி ஆகிய பகுதிகளில் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் s.விஜியகுமார் தலைமையில் அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி N.ஆனந்து (EX.மலை) அவர்கள் கொடியேற்றி பொதுமக்களுக்கு விலையில்லா விருந்தகம் திறந்து வைத்து வேஷ்டி, சேலை ,ஆட்டுக்குட்டி, தள்ளுவண்டி ,அடுப்பு மற்றும் பாத்திரம், பள்ளி குழந்தைகளுக்கு டியூப்லைட் மற்றும் மின்விசிறி, அரிசி, சேர் ,பூச்சிக்கொல்லி அடிக்கும் மிசின், விவசாயிகளுக்கு பம்புசெட், லேப்டாப், தண்ணீர் மோட்டார்,3சக்கர வண்டி, சைக்கிள்,பேசன் , ஏர்கூலர்,மருத்துவமணைக்கு கெய்சர் மிஷின் ஆகியவை சுமார் 6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் திரளான மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.