ஆவியை அடக்கும் " கொம்பு" ஜீவா - திஷா பாண்டே கலகலப்பு
ஆவியை அடக்கும் " கொம்பு"
ஜீவா - திஷா பாண்டே கலகலப்பு
லொள்ளு சபா ஜீவாவும் திஷா பாண்டேவும் ஜோடியாக நடிக்கும் படத்தின் பெயர் தான் " கொம்பு "
சாய் சீனிவாசா பிக்சர்ஸ் சார்பில் பன்னீர்செல்வம் __ வானதி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் தான் " கொம்பு "
இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் இப்ராகிம் கூறியதாவது, " நான் சந்திரகுமார் மற்றும் பாலு ஆனந்த் இருவரிடமும் இயக்குனர் பயிற்சி எடுத்தேன். இந்தப் படத்தோட கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதையாகும்.ஒரு ஊரில் ஆவிகளின் அட்டகாசத்தை அடக்க மாட்டுக் கொம்பு பயன்படுத்துவதை கேள்விப்பட்ட ஆராய்ச்சி மாணவியான திஷா பாண்டே அந்த ஊருக்கு வருகிறார். நாயகனை சந்திக்கிறாள். அதன் பிறகு நடைபெறும் சம்பவங்கள் திகிலாகவும் காமெடியாகவும் இருக்குமாறு திரைக்கதை அமைச்சிருக்கேன்" என்று கூறினார். இப்ராகிம்.
லொள்ளு சபா ஜீவா, திஷா பாண்டே, பாண்டியராஜன், சுவாமிநாதன் இன்னும் பலர் நடிக்கின்றனர்.
ராதிகா நடன பயிற்சியையும், கஜினி குபேந்தர் சண்டை பயிற்சியையும் '.ஆனந்த்மணி கலையையும், சுதீப் ஒளிப்பதிவையும், கிரீசன் படத்தொகுப்பையும், தேவ் குரு இசையையும் கவனித்துள்ளனர்.
சரவணன் புரொடக்சன் எக்ஸ்கியூட்டிவ்வாகவும், எக்ஸ்கியூட்டிவ் புரொடியூசராக ரவிசங்கரும் பொறுப்பேற்றுள்ளனர்.
சாய் சீனிவாசா பக்சர்ஸ் சார்பில் எம். பன்னீர்செல்வமும் வானதியும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இ. இப்ராகிம் தனது முதல் படமாக இயக்கி உள்ளார்.
விஜயமுரளி
கிளாமர் சத்யா
PRO